தயவுசெய்து கிளம்புங்கள்.. உக்ரைனில் 9 மனிதாபிமான வழித்தடங்கள்.. மக்கள் வெளியேற ஏற்பாடு தீவிரம்..!
கீவ் : உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் மரியுபோல் நகரை தவிர ஒன்பது இடங்களில் மனிதாபிமான வழித்தடத்தை அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவ துருப்புகளும் நவீன ஆயுதங்களுடன் உக்கிரமான போரில் ஈடுபட்டு வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ்ஐ கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் வடமேற்கு புறநகர் பகுதிகளான இர்பின் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ளன.

உக்ரைன் போர்
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷ்ய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. உக்ரைனில் போர் பகுதிகளில் உள்ள ரஷ்ய படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் சிரமத்தை சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கடத்தல்?
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் இருந்து 2,389 உக்ரைன் குழந்தைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கும் அந்நாட்டின் அதிபர் விளாடிமி புடினுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மனிதாபிமான வழித்தடங்கள்
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் மரியுபோல் நகரை தவிர ஒன்பது இடங்களை மனிதாபிமான வழித்தடத்தை அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.கீவ் நகரில் உள்ள ஸ்வியாடோஷின்ஸ்கி, ஷெவ்சென்கிவ்ஸ்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்பு, சில தனி வீடுகள், ஷாப்பிங் மையம் மீது தாக்குல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது புகார்
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடத்தில் மக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 11 பேருந்து ஓட்டுனர்கள், 4 மீட்புப்பணி ஊழியர்களை ரஷ்யப் படைகள் பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த புகாரானது மேலும் சிக்கலை ரஷ்யாவுக்கு வரவழைத்துள்ளது. ஆனால் இந்த புகாரையும் ரஷ்யா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications