For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் பலி, 2 பேர் காயம்: பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். தாக்குதல் நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடக்க 3 நாட்களே உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மத்திய பாரீஸில் உள்ள சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியில் நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் அருகே ஒரு கார் வந்து நின்றது.

Ahead of French Presidential polls, one killed in shooting at Paris

அந்த காரில் இருந்து வெளியே வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார், 2 பேர் காயம் அடைந்தனர்.

தப்பியோட முயன்ற அந்த நபரை போலீசார் சுட்டுக் கொண்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பெல்ஜியத்தில் இருந்து ரயில் மூலம் பிரான்ஸுக்கு ஒரு ஆபத்தான நபர் வந்துள்ளதாக நேற்று தகவல் கிடைத்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் ரயில் மூலம் வந்த நபரா என்பது இன்னும் தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிரான்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A police officer was killed and one person was wounded in a shooting that took place at Paris's Champs Elysees on Thursday. The incident took place just days ahead of the presidential elections in France.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X