அகமதாபாத் விமான விபத்து.. வேண்டுமென்றே சுவிட்சை ஆஃப் செய்த பைலட்? வெளியான ஷாக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

ரோம்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 260 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கு விமானிகளின் கவன குறைவுதான காரணம் என இத்தாலி நாட்டை சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

விமான விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால்தான், என்ஜின் ஆஃப் ஆகி பின்னர் விபத்து ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

Ahmedabad Plane Crash

ஏர் இந்தியா விமானம்

ஆனால், இந்த சுவிட்ச் தானாக ஆஃப் ஆகிவிடாது. அப்படியெனில் விமானிகளில் யாராவது ஒருவர் வேண்டும் என்றே சுவிட்சை ஆஃப் செய்திருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. மட்டுமல்லாது, சமீபத்தில் லண்டனிலிருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் புறப்படும்போது இதேபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டது.

விபத்து எப்படி நடந்தது?

விமானிகள் சுவிட்டை ஆஃப் செய்யவில்லை. ஆனால், சுவிட்ச் தானாக ஆஃப் ஆகியிருந்தது. அகமதாபாத் விபத்தில் சிக்கிய விமானமும் இதே ரகம்தான். எனவே இந்த ரகத்தில் உள்ள விமானங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில் விபத்துக்க விமானிகள்தான் காரணம் என்று இத்தாலி நாளிதழான 'கொரியர் டெல்லா செலா' அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இத்தாலி ஊடகத்தின் குற்றச்சாட்டு

விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 787 டிரீம்லைனர். இது அமெரிக்க தயாரிப்பு விமானம் என்பதால், விபத்து குறித்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆய்வை தொடங்கினர். அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, விமானத்தின் என்ஜின் தயாரிப்பாளர்கள் ஆகியோர் விபத்து புலனாய்வு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து டிஜிட்டல் ஃபாரன்சிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

அமெரிக்க அதிகாரிகள், என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் சுவிட்ச் தானாக ஆஃப் ஆகிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள, செயற்கையான சூழலை உருவாக்கி சோதித்தனர். அதில், என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் சுவிட்ச் ஆஃப் ஆகவில்லை. கைகளால் ஆஃப் செய்யப்பட்டால் மட்டுமே ஆஃப் ஆனது.

மனித தலையீடு

மட்டுமல்லாது வாஷிங்டனில் உள்ள அதிநவீன ஆய்வகத்தில் வைத்து, கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்பட்டது. அதில், இந்த சுவிட்ச் Run நிலையிலிருந்து Cut-off நிலைக்கு மாற்றப்பட்டதை மில்லி செகண்ட் துல்லியத்துடன் கண்டறிந்தனர். இந்த ஆய்வில், சுவிட்ச் தானாக ஆஃப் ஆக வாய்ப்பு இல்லை என்பதை கண்டுபிடித்தனர். இந்த வகை விமானங்களில், என்ஜினுக்கு செல்லும் எரிபொருளை நிறுத்தி வைக்கும் சுவிட்ச் தானாகவே ஆஃப் ஆவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மனித தலையீடுகளால்தான் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் ஆணித்தரமாக முன்வைத்திருக்கிறார்கள்.

யார் செய்தது?

அப்படியெனில் யார் சுவிட்சை ஆஃப் செய்தது? என்று கேள்வி எழுந்தது. இதற்கும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். கேப்டன் சுமீத் சபர்வால் இவர்தான் சுவிட்சை ஆஃப் செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர் விவாகரத்து உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் இதை செய்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தகவலை தான், இத்தாலி செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+