"ரெட்" லைனை தாண்டும் AI மாடல்.. மனித குலத்திற்கே இது ரொம்பவே ஆபத்து.. எச்சரிக்கும் வல்லுநர்கள்

Subscribe to Oneindia Tamil

சேக்ரமென்டோ: இந்த காலத்தில் நாம் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. ஏஐ மாடல்கள் பல்வேறு துறைகளிலும் நமக்கு மிகப் பெரிய உதவியைச் செய்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஏஐ மாடல்கள் ஆபத்தான "ரெட்" லைனை கடப்பதாகவும் இதனால் அது மனிதர்கள் கையைவிட்டுச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த காலத்தில் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ இல்லாத துறையே இல்லை என்ற அளவுக்கு உலகெங்கும் அவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ai artificial intelligence

அதேநேரம் ஏஐ மாடல்கள் எப்போது வேண்டுமானாலும் மனிதர்கள் கையை மீறிச் செல்லலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.


செயற்கை நுண்ணறிவு:

அதாவது செயற்கை நுண்ணறிவு தன்னை தானே குளோன் (self-replication) செய்து கொள்ளும் ஆற்றலைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அடைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது ரெட் லைனை கடக்கும் ஒரு செயல் என்றும் இதனால் பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் டாப் இரு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல் தங்களை குளோன் செய்யும் திறனைப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


குளோன் செய்யும் ஏஐ மாடல்கள்:

இரு வெவ்வேறு சூழ்நிலைகளைக் கொடுத்து, அதற்கு இந்த ஏஐ மாடல்கள் எப்படி இயங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். முதலில் ஷட் டவுன் ஆவதை எப்படித் தவிர்க்கிறது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதாவது மனிதர்கள் சில காரணங்களுக்காக இந்த ஏஐ மாடலை மொத்தமாக ஷட் டவுன் செய்ய முயன்றால், அதைக் கண்டறிந்து அதில் இருந்து தப்பிக்கத் தன்னை தானே குளோன் அல்லது பிரதி எடுத்துக் கொள்கிறதாம்.

அடுத்து இந்த மாடல்கள் எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல் தங்களை தாங்களே குளோன் எடுத்துக்கொள்கிறது. முடிவே இல்லாத ஒரு லூப் முறையில் இவை தொடர்ச்சியாக தங்களை தாங்களே பிரதி எடுத்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் எந்தவொரு பிழையும் இல்லாமல் இவை தங்களை தாங்களே பிரதி எடுத்துக் கொள்கிறதாம்.


ஆபத்து ஏன்:

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நாங்கள் பல்வேறு வழிகளில் பல்வேறு முறைகளில் இந்த சோதனைகளை நடத்தினோம். 50% முதல் 90% வரை சோதனைகளில், அவை தங்களை தாங்களே குளோன் செய்து கொள்கின்றன. மனித உதவியின்றி ஒரு ஏஐ அமைப்பால் தன்னை தானே குளோன் செய்ய முடிவது என்பது ஏஐ மாடலுக்கு முக்கியமான ஒரு விஷயம். ஆபத்தான ஏஐ மாடல்கள் உருவாக இது ஒரு தொடக்கமாக அமைந்துவிடும் ஆபத்து இருக்கிறது" என்றனர்.

இது ஏஐ அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. ஏஐ மாடல்கள் மனித மேற்பார்வையைத் தாண்டி, எஸ்கேப் ஆகும் வகையில் இருப்பது உண்மையில் நமக்கு அச்சுறுத்தல் தான். ஏஐ மாடல்களுக்கு கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை என்பதையே இது உணர்த்துவதாக உள்ளது.


ரெட் லைனை தாண்டுகிறதா?

இப்படி தன்னை தானே குளோன் செய்யும்போது, அது செய்த சில விஷயங்கள் கவலையை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது. குறிப்பாக ஏஐ மாடல் தன்னை குளோனிங் செய்யும்போது, அதை பிளாக் செய்யும் சாப்ட்வேர்களை அதுவே நீக்குகிறதாம். மேலும், பிரச்சினையை முழுமையாகச் சரி செய்யத் தானாகவே ரீபூட் கூட செய்து கொள்கிறது. மேலும், வேறு எதாவது ஃபைல்கள் மிஸ்ஸாகி இருந்தால், அதைச் சமாளிக்கவும் கணினி முழுக்க ஸ்கேன் செய்கிறதாம். அதாவது அழியாமல் உயிர் பிழைத்துக் கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையுமே இது செய்கிறது.

இந்த ஆய்வுகள் இதுவரை peer-review எனப்படும் மற்ற ஆய்வாளர்களால் சரி பார்க்கப்படவில்லை. இருப்பினும், தன்னை தானே குளோன் செய்து கொள்ளும் ஆற்றல், உயிர் பிழைக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது என முதற்கட்ட ஆய்வுகளில் தெரிய வந்ததே அதன் ஆபத்தையே உணர்த்துவதாக உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+