தென் ஆப்பிரிக்கா: எச்.ஐ.வி. நோயாளியின் 40 வது கின்னஸ் சாதனை...
பிரெட்டோரியா: தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த எச்.ஐ.வி. கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து 50 மணி நேரமாக போனில் பேசிக் கொண்டுள்ளார். உலக சாதனை படைக்கும் நோக்கில் இதனை அவர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் பிரெட்டோரியாவின் தெற்கே உள்ள செண்சூரியன் நகரில் ஆண்ட்ரே வன் ஜிஜ்ல் (63) என்பவர் கடந்த வியாழக்கிழமை இந்த சாதனை முயற்சியை தொடங்கினார்.
தொடர்ந்து 50 மணி நேரமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இவர், இதற்கு முன்னர் தொடர்ந்து 54 மணி நேரம் 4 நிமிடங்களுக்கு தொலைபேசியில் பேசிய முந்தைய உலக சாதனையை முறியடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கனவே, தொடர்ந்து 13 நாட்கள் வெந்நீர் தொட்டியில் அமர்ந்திருந்தது, டிஸ்கோ இசைக்கேற்ப தொடர்ந்து 345 மணி நேரம் நடனம் ஆடியது உள்ளிட்ட 39 வகை அரிய சாதனைகளையும் செய்துள்ளதாக இவர் கூறுகிறார்.
எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏய்படுத்தவே இந்த சாதனை முயற்சி என கூறும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிசசை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications