தீயில் சிக்கிக் கருகிய கப்பல் “நார்மன் அட்லாண்டிக்” – மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்கள்!
ஏதென்ஸ்: நார்மன் அட்லாண்டிக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து பயணிகளைக் காப்பாற்றும் பணியில் இத்தாலி மற்றும் கீரிஸ் நாட்டு ஹெலிகாப்டர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கிரீஸ் நாட்டு துறைமுகமான பட்ராசிலிருந்து 478 பேருடன் புறப்பட்ட "நார்மன் அட்லாண்டிக்" பயணிகள் கப்பலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
பட்ராஸ் துறைமுகத்திலிருந்து காலை 5:30 மணியளவில் 411 பயணிகள் மற்றும் 55 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இத்தாலி நாட்டில் உள்ள அன்கோனா துறைமுகத்துக்கு "நார்மன் அட்லாண்டிக்" கப்பல் சென்றுகொண்டிருந்த போது அதன் பார்க்கிங் பகுதி முதலில் தீப்பிடித்துள்ளது.

இவ்விபத்து ஏற்பட்ட போது கப்பலானது கிரீஸ் தீவுப்பகுதியான ஒத்தோனோய் அருகே சென்றுகொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து எச்சரிக்கை விடுத்த கப்பலின் கேப்டன் பயணிகள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு கப்பல்கள், மற்றும் இத்தாலி மற்றும் கிரேக்க நாட்டு விமானங்கள் விரைந்துள்ளன. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 200 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அக்கப்பலில் பயணம் செய்த மேகா என்ற பயணி பதட்டத்துடன் கூறுகையில், கப்பலில் வரவேற்பறையில் நாங்கள் இருக்கும் நிலையில் எங்கள் காலில் உள்ள ஷூ தகிக்கிறது, எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
கப்பல் உள்ள பகுதியில் வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் 411 பயணிகளும், 55 கப்பல் ஊழியர்களும் உள்ளனர். மேலும் 222 வாகனங்களும் கப்பலில் இருந்தன. தீ விபத்து குறித்து கிரீஸ் டிவிக்கு பயணிகள் மொபைல்போனில் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிரீஸ் அரசு, பயணிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது. தீ மேலும் பரவியதால் பயணிகளை அவசர படகுகள் மூலம் வெளியேற்ற கப்பல் மாலுமி உத்தரவிட்டார். பயணிகள் அணிய உயிர் காக்கும் ஆடையும் வழங்கப்பட்டது.
இறுதி தகவலின்படி 300 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சரக்கு கப்பல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இவ்விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எஞ்சியவர்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications