அடுத்த ரேஸ்-க்காக போர்ச்சுக்கல் புறப்பட்டார் அஜித்குமார்! இந்த பந்தயத்தில் இவ்வளவு சிக்கல்களா!
லிஸ்பன்: சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, அடுத்த பந்தயத்தில் பங்கேற்க அஜித்குமார் போர்ச்சுக்கல் புறப்பட்டுள்ளார்.
போர்ச்சுக்கலில் 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, தெற்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள கார் பந்தய வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் என இரண்டு நாடுகளில் 2 நாட்கள் போட்டியாக நடக்கும். இதன் டிராக் நேரம் 6 மணி நேரமாக இருக்கும். அதிகபட்சமாக 30 கார்கள் வரை இதில் பங்கேற்கலாம். கார் பந்தயங்களில் கொடி கட்டி பறக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த போட்டி சவாலான ஒன்று.

முதல் விஷயம் இதில் பங்கேற்கும் கார்கள் உயர் தொழில்நுட்பத்தை கொண்டிருக்க வேண்டும். மற்ற போட்டிகளை விடவும், இதில் பங்கேற்க தனி சிறப்புமிக்க கார்கள் வேண்டும். தெற்கு ஐரோப்பாவில் உள்ள போர்டிமோ, எஸ்டோரில் மற்றும் பார்சிலோனா-கேடலுனியா போன்ற டிராக்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. இதில் ஜெயிக்க வேண்டும் எனில் துல்லியம் மிகவும் முக்கியமான ஒன்று.
அதேபோல தெற்கு ஐரோப்பா நிலையற்ற வானிலைக்கு மிகவும் பிரசித்திபெற்ற பகுதியாகும். திடீரென மழை, திடீரென வெயில் என வானிலை குழப்பி அடிக்கும். இந்த வானிலை பந்தய ஓட்டுநர்களின் பொறுமையை சோதித்துவிடும். எனவே கவனமாகவும், துல்லியமாகவும் செயல்பட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும்.
இப்படியான போட்டியில்தான் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றிபெற்றுவிட்டால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்.
முன்னதாக துபாயில் நடந்த போட்டியில் அஜித்குமார் ஜெயித்திருந்தது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றிருந்தது. திரைப்படங்களை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு ஒரு துறையில் அஜித்குமார் வெற்றிக்கொடி நாட்டியிருப்பது அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இவர் நடடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து குட், பேட், அக்லி திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் கார் பந்தயங்களிலும் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார்.
'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' போட்டியில் பங்கேற்கும் அஜித்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications