நள்ளிரவில் வந்த போன்! விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: கடந்த மே 10 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையது ஆசிம் முனிர் எனக்கு போன் செய்தார் என்றும், அப்போது நுர்கான் விமானப்படை தளத்தில் இந்தியா, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் விமான படை தளம் பலத்த சேதம் அடைந்திருந்தாலும், இதனை பாகிஸ்தான் முழுவதும் ஒத்துக்கொள்ளாமல் பூசி மெழுகி வந்தது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

alerted-at-2-30-am-by-army-chief-general-asim-munir-pak-pm-shehbaz-sharif-confirms-india-strikes

மவுனம் காத்த பாகிஸ்தான்

இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதலை முறியடித்தது. அதுமட்டும் இன்றி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது. இதில் பாகிஸ்தானில் உள்ள நுர்கான் விமான படை தளம் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் இதனை பாகிஸ்தான் முழுவதும் ஒத்துக்கொள்ளாமல் பூசி மெழுகி வந்தது. பாகிஸ்தானின் விமானப்படை தளத்தில் பலத்த சேதம் ஏற்பட்டதை செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் வெளி உலகத்திற்கு நிரூபணம் ஆனால் கூட பாகிஸ்தான், திருடனுக்கு தேள் கொட்டியது போல மவுனம் காத்து வந்தது.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:- மே 10 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையது ஆசிம் முனிர் எனக்கு போன் செய்தார். அப்போது நுர்கான் விமானப்படை தளத்தில் இந்தியா, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய தகவலை தெரிவித்தார்.

இந்தியா ஏவிய ஏவுகணைகளில் ஒன்று நூர்கான் விமானப்படை தளத்திலும் மற்றவை பிற இடங்களிலும் விழுந்தன" என்று கூறினார். நூர்கான் விமானப்படை தளம் என்பது இஸ்லாமபாத்திற்கும் ராவல்பிண்டிக்கும் இடையே உள்ளது. பாகிஸ்தானின் மிக முக்கியமான விமானப்படை தளமாக இது உள்ளது. இதற்கு முன்பாக சக்லாலா விமானப்படை தளம் என்று அறியப்பட்ட இந்த தளம், 1971 ஆம் ஆண்டு இந்தோ- பாகிஸ்தான் போரின் போது, இந்திய விமானப்படை தளத்தால் குறிவைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

துல்லியம், துணிச்சலை காட்டுகிறது

பாஜகவின் ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:- "பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் நள்ளிரவில் போன் செய்து நுர்கான் விமானப்படை தளம் மற்றும் பிற இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதை சொன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நள்ளிரவில் அந்நாட்டின் பிரதமர் தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் துல்லியம், துணிச்சல் உள்ளிட்டவற்றை இதை காட்டுவதாக அமைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+