உலகிலேயே முதல்முறை.. அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்.. பெரும் பரபரப்பு!
அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது
Recommended Video
டெஹ்ரான்: அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.
உலகிலேயே தீவிரவாதத்திற்கு எதிரான ஒரே சவுக்கிதார் நாங்கள்தான் என்பது போல அமெரிக்கா செயல்பட்டு வந்தது. அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு போராளி குழுவையும் தீவிரவாத அமைப்பு ஒட்னரு முத்திரை குத்த முடியும்.
யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என்று கூறி, தடை செய்ய முடியும். உலகம் முழுக்க தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா இப்படித்தான் கட்டுப்படுத்தி வருகிறது.

புதிய திருப்பம்
ஆனால் இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஆம் நம்புங்கள் ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

தீர்மானம்
இதற்காக ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.

முப்படை எப்படி
இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார். இந்த அறிவிப்பு அமெரிக்காவை உணர்வு ரீதியாக சீண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக ஈரானை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் தலைநகர்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications