"டாக் பைட்" பதற்றம்.. நடுவானில் அருகருகே வந்த சீன - அமெரிக்க போர் ஜெட்கள்.. திக்திக்.. என்ன நடந்தது?
பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் சீன கடல் பிரச்சனை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடந்த 10 வருடங்களாக தீவிரம் அடைந்துள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்து வருகிறது. இது பல வருட சண்டை ஆகும். தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து இருக்கிறது.
தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி நிலவி வருகிறது. இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது.

தென் சீன கடல்
இந்த கடல் பகுதி மொத்தமும் தனக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. அதே சமயம் சீனாவிற்கு எதிராக இதே கடல் எல்லையில் இருக்கும் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் முஷ்டி முறுக்கி வருகின்றன. இங்கு சீனா சின்ன சின்னதாக தீவுகளை அமைத்து வருகிறது. அங்கு ராணுவத்தை சீனா குவித்து வருகிறது. மொத்தமாக தென் சீன கடலை கைப்பற்றும் வகையில் சீனா அங்கு கொஞ்சம் கொஞ்சமாக படைகளை குவித்து வருகிறது. பல சிறிய சிறிய தீவுகளை கடந்த இரண்டு வருடங்களில் சீனா அங்கு மொத்தமாக உருவாக்கி உள்ளது.

மோதல்
இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது. இதில் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இங்கு அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது. தனது கடல் படையையும், விமான படையையும் சீனா இங்கே குவித்து உள்ளது. முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியில் சீனாவின் போர் கப்பல்கள் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. சீனா தொடர்ந்து ஆசிய - பசிபிக் கடலில் இருக்கும் நாடுகளிடம் இப்படித்தான் அத்துமீறி வருகிறது. இதற்கு எதிராகத்தான் தற்போது அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது.

பதற்றம்
இந்த நிலையில்தான் சீனாவின் போர் விமானம் ஒன்று அமெரிக்காவின் கண்காணிப்பு விமானத்திற்கு மிக அருகில் வந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 21ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்காவின் US Air Force RC-135 விமானம் இங்கே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிலிப்பைன்ஸ் எல்லையில் ரோந்து சென்று இருந்தது. அப்போது சீனாவின் J-11 விமானம் அமெரிக்க விமானத்திற்கு மிக அருகில் வந்துள்ளது.

இரண்டு விமானம்
இரண்டு விமானங்களும் வெறும் 6 மீட்டர் இடைவெளியில் அருகருகே வந்துள்ளன. எங்கே இரண்டு விமானங்களும் தாக்கிக்கொள்ள போகிறதோ என்ற அச்சம் இதனால் எழுந்துள்ளது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக இவர்கள் அருகருகே சென்றுள்ளனர். எங்கே இது "டாக் பைட்" எனப்படும் வானத்தில் விமானங்கள் மாறி மாறி சுட்டுக்கொள்ளும் நிலைக்கு தள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன்பின் அமெரிக்க போர் விமானம் சீனா எல்லைக்கு அருகே பின்வாங்கியதால் அங்கு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. இரண்டு விமானங்களும் 6 மீட்டர் இடைவெளிக்குள் வந்த இந்த சம்பவம் தென் சீன கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அடுத்து இந்த பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications