உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்
ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளி தாக்குதல் தீவிரவாதிகள் நடத்தலாம் அமெரிக்க எச்சரிக்கை
ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண குவிந்து வருகின்றனர். இந்த போட்டி அடுத்த ஜூலை 15 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அங்கே விளையாட்டு அரங்கங்கள், ரசிகர்கள் கூட்டமாக ஒன்றுகூடும் பகுதிகள், சுற்றுலா இடங்கள், ரயில், விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம். உலகக் கோப்பை போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்துவதற்கான எளிதான இலக்குகளாக உள்ளன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை தகவலைத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் கால்பந்து போட்டி நடக்கும் மைதானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள் அந்த தகவலில், தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications