மோடியின் திடீர் பாகிஸ்தான் விசிட்டை பாராட்டி தள்ளும் அமெரிக்க ஊடகங்கள்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின், திடீர் பாகிஸ்தான் பயணத்தை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையோ, மோடியின், வெளியுறவு கொள்கை நடனம் என்று இதனை வர்ணித்துள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீரென பாகிஸ்தானின், லாகூருக்கு விமானத்தில் சென்று இறங்கினார். பயணத்திற்கு சில மணி நேரங்கள் முன்புதான், அவர் தனது டிவிட்டரில் இத்தகவலை தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமராக வாஜ்பாய் ஆட்சி செய்த காலத்தில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். பின்னர் ஒரு தசாப்தம் கழித்து பாகிஸ்தான் சென்ற முதல்வர் பிரதமர் மோடிதான். இந்த திடீர் பயணம், உலகமெங்கிலும் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

பரபரத்த மீடியா
கிறிஸ்துமஸ் தினமான நேற்று அந்த ரிலாக்சான நேரத்தில் கூட உலக மீடியாக்கள் பரபரக்க தொடங்கின. மோடி, பாகிஸ்தான் செல்ல உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்த உடனேயே, அமெரிக்காவிலுள்ள பல முன்னணி பத்திரிகைகள் அதை, டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் தெரிவித்ததோடு, எஸ்எம்எஸ், இ-மெயில் போன்றவற்றின் மூலமும், வாசகர்களை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்தியாக தர உள்ளதாக கூறின.

வால்ஸ்ட்ரீட் பாராட்டு
அணு ஆயுத பலம் கொண்ட இவ்விரு நாட்டு உறவுகளை மறு கட்டமைப்பு செய்ய இந்த சர்ப்ரைஸ் விசிட் உதவும் என்று, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது. சிகாகோ டிரிபுன் பத்திரிகையும் இந்த விசிட்டை பாராட்டியுள்ளது.

பெரிய சர்ப்ரைஸ்
எல்லோருக்கும் இது ஒரு பெரிய சர்ப்ரைஸ். 2014, மே 26ம் தேதி மோடி பதவிக்கு வந்தபிறகு இது எதிர்பாராத திருப்பம் என்று டைம் வார இதழ் கூறியுள்ளது.

முன்னேற்றம்
1 தசாப்தத்திற்கு பிறகு, பாகிஸ்தானுக்கு செல்லும் இந்தியாவின் முதல் தலைமை இது. எனவே இவ்விரு நாடுகளுடனான உறவில் முன்நேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று நேஷனல் பப்ளிக் ரேடியோ தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், சர்ச்சைக்குறிய உறவில் மோடி புதிய அத்தியாசத்தை தொடங்கியுள்ளார் என்று வர்ணித்துள்ளது.

குட்டு
அதேநேரம், நியூயார்க் டைம்ஸ் பாராட்டோடு சேர்த்து குட்டும் வைத்துள்ளது. இந்திய பிரதமர் ஒரு கொள்கையிலிருந்து மற்றொரு கொள்கைக்கு மாறிக்கொண்டே இருப்பதாகவும், பாகிஸ்தானுக்கு திடீரென சென்றதும், வெளியுறவு கொள்கையில் நடந்த ஒரு நடனம் என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications