9/11 போல மீண்டும் ஒரு "அட்டாக்" வரலாம்... பய பீதியில் அமெரிக்கர்கள்!
நியூயார்க்: மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் வரலாம் என்ற பீதியில் அமெரிக்கர்கள் உள்ளனராம்.
சமீபத்தில் ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இரண்டு அமெரிக்கர்களை தலையைத் துண்டித்துக் கொன்றதைத் தொடர்ந்து இந்த பய பீதி அதிகரித்துள்ளதாம்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி உலகையே அதிர வைத்த நாள் இன்று. இந்த நினைவு நாளை சற்று பய பீதியுடன்தான் அமெரிக்கர்கள் அனுசரிக்கவுள்ளனர்.

மீண்டும் தாக்குதல் வரலாம்
மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

47 சதவீத அமெரிக்கர்கள் நம்பிக்கை
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், 47 சதவீத அமெரிக்கர்கள், தங்களது நாடு முழு பாதுகாப்பு கொண்ட நாடு அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

26 சதவீத அமெரிக்கர்களுக்குப் பயமில்லை
அதேசமயம் 26 சதவீத அமெரிக்கர்கள் தங்களது நாடு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளதாக கூறியுள்ளனர்.

கொஞ்சம் கம்மிதான் - இது 28
28 சதவீத அமெரிக்கர்கள், தங்களது நாட்டில் பாதுகாப்பு சற்று குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ராணுவ நடவடிக்கை சரியே
அதேசமயம் தங்களது நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதா கூறியுள்ளனர். 61 சதவீதம் பேர் இதை ஆதரித்துள்ளனர்.

தலை துண்டிப்பால் பெரும் பீதி
அதேசமயம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இரண்டு அமெரிக்கர்களைத் தலையைத் துண்டித்துக் கொன்ற செயல் அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
-
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications