கென்ய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அமெரிக்கர்களா?
நைரோபி: கென்யத் தலைநகர் நைரோபியில் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலர் அமெரிக்கர்கள் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அமீனா முகம்மது கூறியுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வணிக வளாக முற்றுகை மற்றும் தாக்குதல் குறித்து அமைச்சர் அமீனா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் அமெரிக்காவிலிருந்து வந்ததாக தெரிகிறது. அவர்கள் மின்னசோட்டா, மிஸவுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
அதேபோல இங்கிலாந்திலிருந்தும் சிலர் ஊடுறுவியுள்ளனர். கென்யாவைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளனர். அமெரிக்கர்கள் 2 முதல் 3 பேர் என்று தெரிகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்று அறிகிறோம்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் வயதில் இளையவர்கள். அதாவது 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் சொமாலியாவைப் பூர்விமாகக் கொண்டவர்கள் என்று தெரிகிறது. அல்லது அரபு வம்சாவளியினராக இருக்கலாம்.
இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

அமெரிக்கர்கள் யாரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்த தீவிர விசாரணை மற்றும் புலனாய்வில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எப்பிஐ அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications