பிரிட்டனில் தம்பதியர் மீது மீண்டுமொரு நச்சுத் தாக்குதல்
வில்ட்ஷரில் சுயநினைவிழந்த நிலையில் கண்டபிடிக்கப்பட்ட ஓர் ஆணும், பெண்ணும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மீது நடத்தப்பட்ட அதே நச்சுப்பொருளான நோவிச்சோக்கை பயன்படுத்தி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டனர்.
இதுபோன்ற அறிகுறிகளுடன் வேறு யாரையும் இதுவரை பார்த்ததில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
இந்த தம்பதியர் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதற்கு எவ்வித பின்னணியும் இல்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்கிரிபாலும், அவரது மகள் யுலியாவும் தாக்குதலுக்குள்ளான அதே பிரிவிடம் இருந்து, இந்த நரம்பு மண்டலத்தை தாக்குகின்ற நச்சுப்பொருளும் வந்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று பெருநகர காவல்துறை உதவி ஆணையாளர் நெயில் பாசு தெரிவித்திருக்கிறார்.
- பிரிட்டன் : ரஷ்ய உளவாளியை பாதித்த விஷம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை
- பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா முடிவு
இதற்கான சாத்தியக்கூறு பற்றி தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நச்சு கலக்கப்பட்ட எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இந்த தம்பதியர் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளானதை முடிவு செய்ய அவர்களின் நடத்தை பற்றி விரிவான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
என்ன பொருள் என்று தெரியாத பட்சத்தில் பொது மக்கள் எதையும் கையில் எடுத்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த முறை நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நச்சுப்பொருளில் என்ன உள்ளடங்கியிருந்தன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வில்ட்ஷர் காவல்துறையோடு இணைந்து பயங்கரவாத தடுப்பு காவல்துறை வலையமைப்பும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புவதாக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி சால்லி டாவிஸ் கூறியுள்ளார்.
வழக்கமான முறையில் வெளியே போடுவதற்கு முன்னர், மக்கள் தங்களுடைய துணிகள், தனிப்பட்ட பொருட்கள், காலணிகள் மற்றும் பைகளை சுத்தப்படுத்திவிட வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்:
- வேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை வீணடிக்க வைக்கிறதா சமூக இணையதளங்கள்?
- "நாங்கள் நலமாக இருக்கிறோம்": தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்
- ஜப்பானின் வினோத ஆக்டோபஸ் கொல்லப்பட்டது ஏன்?
- பிரபாகரனுக்கு ஆதரவாக விக்னேஸ்வரன் கருத்து: ஒரு புது சர்ச்சை
- இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினரை ஒன்றிணைத்த மூதாட்டி
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications