உச்சக்கட்ட பதற்றம்.. மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் டாப் பாதுகாப்பு அதிகாரி.. பின்னணியில் யார்!
தைவான்: சீனா தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தைவான் விவகாரம் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தைவானைச் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்றே தொடர்ந்து கூறி வருகிறது.
அதேநேரம் தைவான் தனி நாடு என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தைவான்
தைவானுக்கு தாங்கள் வழங்கும் ஆதரவைக் காட்டும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது தைவானுக்கு செல்வார்கள். இது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால், இந்த முறை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேரடியாகத் தைவான் சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தேவையில்லாமல் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் சாடியுள்ளது.

சீனா
இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சீனா- தைவான் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளது. இந்தச் சூழலில் தைவானின் முக்கிய ராணுவ தலைவர் ஒருவர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அவர் எப்படி உயிரிழந்தார், இதற்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மர்ம மரணம்
தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான ஓ யாங் லி-ஹ்சிங் என்பவர் தெற்கு தைவானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இதனிடையே இன்று அதிகாலை அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

யார் அவர்
ஓ யாங் லி-ஹ்சிங் தைவான் பாதுகாப்புத் துறையில் முக்கியமானவர். அவர் தைவான் அரசின் தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொண்ட அவர், பல முக்கிய சோதனைகளை மேற்பார்வை செய்தவர். பாதுகாப்பு ஆய்வு தொடர்பான பணிக்காகவே அவர் தெற்கு தைவான் பகுதிக்குச் சென்று இருந்தார்.

நான்சி பெலோசி
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்திற்குப் பின்னர், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தைவான் வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காகச் சிலர் திட்டமிட்டு, முக்கிய அதிகாரியைக் கொலை செய்து இருக்கலாம் என்றும் சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சீனா விவகாரம்
தைவான் பகுதியைச் சுற்றி சீன ராணுவங்கள் தொடர்ச்சியான போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தைவான் பகுதிக்கு மிக அருகே சீன விமானங்கள் பறக்கின்றன. சீன விமானங்களும் ஏவுகணைகளும் நேரடியாகத் தைவான் மீது பறந்ததாகச் சீனாவின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஆரம்பிக்கும் அபாயம் கூட உள்ளதாகச் சிலர் எச்சரிக்கின்றனர்.
-
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications