இதுதான் இந்தியா.. மோதலுக்கு நடுவே வங்கதேசத்துக்கு 2 லட்சம் டன் அரிசி வழங்கும் மத்திய அரசு
டாக்கா: மோதலுக்கு நடுவே நம் நாட்டிடம் அரிசி கேட்டு வங்கதேசம் கெஞ்சியது. இந்நிலையில் தான் முதற்கட்டமாக நம் நாட்டில் இருந்து வங்கதேசத்துக்கு 27 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லட்சம் டன் அரிசிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அரிசி வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச வன்முறைக்கு பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது, கோவில்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் எல்லையில் ட்ரோன் பறக்கவிட்டு பதற்றத்தை ஏற்படுத்துவது, பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
இப்படியாக ஒருபுறம் நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் இடைக்கால அரசு மறுபுறம் நம் நாட்டை தான் உணவுக்கு நம்பி இருக்கிறது. இப்போது வங்கதேசம், நம் நாட்டிடம் உதவி கேட்டு வருகிறது. அதாவது வங்கதேசத்தில் தற்போது நிதி நெருக்கடியோடு, சமீபத்திய வெள்ளத்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. வங்கதேசத்தை பொறுத்தவரை அரசு சார்பில் உணவு தானியங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்துக்காக வங்கதேசம், நம் நாட்டிடம் அரிசி கேட்டுள்ளது.
இந்நிலையில் தான் நம் நாட்டில் இருந்து முதற்கட்டமாக 27 ஆயிரம் டன் அரிசி வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் மூலம் நம் நாட்டில் இருந்து அரிசி வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், ‛‛வங்கதேசத்தில் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை. இருப்பினும் சமீபத்திய வெள்ளம் காரணமாக வரும் காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்த 2 லட்சம் டன் அரிசியுடன் கூடுதலாகஇன்னும் 1 லட்சம் டன் அரிசியை டெண்டர் மூலம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும். இந்த டெண்டர் ஒப்பந்தம் வங்கதேசம் மற்றும் இந்தியா அரசுக்கு இடையே மேற்கொள்ளப்படும்.
மேலும் மியான்மர் நாட்டு அரசுடன் 1 லட்சம் டன் அரிசிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அரிசியை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் இறக்குமதியாளர்கள் சார்பில் 1.6 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வங்கதேச அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர்'' என்றார்.
வங்கதேசத்தை பொறுத்தவரை தற்போது அரிசி விலையை நிலையாக வைத்து கொள்ள அனைத்து வரிகளுக்கும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதோடு வங்கதேசம் அதிகளவில் இந்தியாவில் இருந்து தான் அரிசியை அதிகமாக பெற்று வருகின்றனர். தனியார் நிறுவனங்களிடம் இருந்து பூஜ்ஜியம் இறக்குமதி வரியுடன் இந்த அரிசியை தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். வங்கதேசம் நம் நாட்டுடன் மோதி வருகிறது. இதனால் இந்த ஒப்பந்தங்களை நம் நாடு நினைத்தால் ரத்து செய்ய முடியும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாடு என்ற நட்பிலும் அரசி ஏற்றுமதியை செய்கிறது.
அதோடு வங்கதேசம் நம் நாட்டை ஒப்பிடும்போது மக்கள்தொகை, ராணுவம் உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கி உள்ளது. இருப்பினும் மோதலை விரும்பாமல் நட்பு ரீதியாகவே நாம் செல்கிறது. அதோடு தொடர்ந்து வங்கதேசத்துடன் சேர்ந்து செயல்பட தான் மத்திய அரசு விரும்புகிறது. இதுபற்றி வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரனய் குமார் வர்மா கூறுகையில், ‛‛கடந்த ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு வங்கதேசத்தில் மாற்றம் நடந்தது. அதன்பிறகு இடைக்கால அரசுடன் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டின் கடந்த 6 மாதத்தில் அதிகமான வணிகங்களை பெற்றுள்ளோம். இது கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தை ஒப்பிடும்போது அதிகமாகும்'' என்று கூறியுள்ளார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications