இந்தியாவுக்கு பேராபத்து.. பாகிஸ்தானுக்கு, சீனா தரும் ‛கிப்ட்'.. குவிக்கப்படும் FC 31 போர் விமானம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா அடித்த அடியில் கதிகலங்கிப்போன பாகிஸ்தான் இப்போது சீனாவிடம் இருந்து எஃப்சி 31 ‛கைரோஃபால்கான்' ஸ்டெல்த் போர் விமானத்தை வாங்கி தனது விமானப்படையில் சேர்க்கிறது. இது 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் என்பதால் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக நம் நாடு கடந்த மாதம் 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

amid-of-clash-with-india-pakistan-begins-deployment-of-chinas-5th-generation-fc-31-stealth-fighter

இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் என்று 12 இடங்கள் அழிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானின் போர்விமானங்கள் அழிக்கப்பட்டது. மொத்தம் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. மேலும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கி வைத்திருந்த ரேடார் அமைப்பும் தாக்கி அழிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள், 2 AWACS உள்பட 9 விமானங்களை நம் நாடு அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் நிலைக்குலைந்த பாகிஸ்தான் நம்மிடம் மோதலை நிறுத்த கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது விமானப்படையை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. நம் நாட்டுடன் மோதல் நின்றாலும் கூட தொடர்ந்து பதற்றம் என்பது நீடிக்கிறது. இதனால் விமானப்படை வலுவாக்கும் நோக்கில் சீனாவிடம் இருந்து புதிய போர் விமானங்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்கிறது.

அந்த வகையில் பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து எஃப் 31 ரக போர் விமானங்களை வாங்குகிறது. இந்த விமானத்தின் முழுப்பெயர் FC 31 'Gyrofalcon' stealth fighter jet என்பதாகும். இது சீனாவின் ஷென்யாங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது 5ம் தலைமுறை போர் விமானமாகும். இது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த விமானம் நிற்காமல் 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பறக்க முடியும். அதன்பிறகு வானிலேயே எரிபொருள் நிரப்பினால் 1900 கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் உள்ளது. இது 28,000 கிலோ எடையை சுமந்து செல்ல கூடியது. இந்த எஃப்சி 31 ஸ்டெல்த் போர் விமானம் என்பது மாக் 1.8 வேகத்தில் பயணிக்க கூடியது. அதாவது மணிக்கு 2,200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க கூடியது. பிஎல் 17 ரக ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த பிஎல் 17 ரக ஏவுகணை என்பது 400 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது.

நம் நாட்டிடம் தற்போது வரை 5ம் தலைமுறை விமானம் இல்லை. ரஃபேல், Su-30 MKI, மிராஜ் 2000 மற்றும் LCA தேஜஸ் உள்ளிட்ட விமானங்கள் உள்ளன. இவை 4.5 தலைமுறை ஜெட் விமானங்கள். நம் நாடு உள்நாட்டு உற்பத்தியில் 5ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 2035ம் ஆண்டில் தான் இந்த போர் விமானம் நம் நாட்டின் விமானப்படையில் சேர்க்கப்படும் என்பதால் பாகிஸ்தானின் இந்த செயல் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

எஃப்சி 31 என்பது ஸ்டெல்த் வகை போர் விமானம் என்பதால் இதனால் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ், எஸ் 400 உள்ளிட்டவற்றால் இதனை கண்டறிந்து அழிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சீனாவிடம் இருந்து எஃப்சி 31 ஸ்டெல்த் விமானத்தை பாகிஸ்தான் வாங்குவது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த விமானம் பாகிஸ்தான் கைக்கு செல்லும். சீனாவிடம் இருந்து FC-31 போர் விமானங்களை 30 முதல் 36 வரை பாகிஸ்தான் வாங்கலாம். இது அடுத்த 12-18 மாதங்களில் 6 கட்டங்களாக பாகிஸ்தான் கைக்கு செல்லும் என்பதால் நம் நாடு சுதாரிக்க வேண்டும் என்கின்றனர் ‛டிபென்ஸ் எக்ஸ்பர்ட்டுகள்’.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+