அணுகுண்டுக்கு எதிர்ப்பு.. ஏடாகூடமாக மிரட்டும் டிரம்ப்.. அமெரிக்கா - ஈரான் இன்று 2வது பேச்சுவார்த்தை
டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகால பிரச்சனை உள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்கா விரும்பவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும்.

அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளை எடுத்து கொண்டால் இஸ்ரேலிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது. இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இப்போது ஈரானும் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாகும் என்பது மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சக்திவாய்ந்த நாடாக மாறும்.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது சரியலாம். இதனால் எப்படியாவது ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பது தான் டிரம்பின் முதல் நோக்கமாக உள்ளது. இதனால் அணுசக்தி திட்டம் மூலம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு, டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
முதலில் அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்தது. அதன்பிறகு ஓமனில் வைத்து அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற்றது. கடந்த 12ம் தேதி இந்த பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் மற்றும் ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இருப்பினும் பேச்சவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இருநாடுகளும் தெரிவித்தன.
இதையடுத்து அடுத்தக்கட்டமாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் ஈரான் வெளியறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் உள்பட பிற பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன், ஈரான் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று டொனால்ட் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரான் சிறந்த நாடாக மாற வாய்ப்புள்ளது. பலிகள் ஏற்படாமல் அந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் எனது முதல் திட்டம். அதேவேளையில் எனது 2வது திட்டத்தை கையில் எடுக்க வைத்தால் அது ஈரானுக்கு மிகவும் மோசமாக அமையும்'' என்று கூறியுள்ளார்.
அதாவது ஈரான் பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி திட்டத்தின்படி அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது நடந்தால் ஈரான் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை, குண்டு வீச்சை கையில் எடுப்பேன் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம்












Click it and Unblock the Notifications