சிக்கிய திமிங்கலம்.. சத்தீஸ்கரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணமான மாகாதேவ் செயலி ஓனர் துபாயில் கைது
துபாய்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் சிக்கியுள்ளார். இவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கி உள்ளனர்.
சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவரது நண்பர் ரவி உப்பால். இவர்கள் 2 பேரும் துபாய் சென்றனர். இதையடுத்து அவர்கள் மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகள் மூலம் சூதாட்டம் என்பது நடந்தது.

மேலும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதற்கிடையே தான் சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் 2 பேரும் ஹவாலா முறையில் பெரும் தொகை பெற்றதாகவும், கைமாற்றி கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் சத்தீஸ்கர் மாநில முன்னாள்காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவருக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் சத்தீஸ்கரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்த மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம் வடஇந்தியாவில் பெரிய அளவில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. செயலியின் உரிமையாளர்களான ரவி உப்பால் மற்றும் சவுரப் சந்திரகர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை பணமோசாடி தடுப்பு சட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் தலைகர் ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் தான் மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது. இந்நிலையில் தான் ரவி உப்பால் துபாயில் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்டர்போல் மூலம் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது ரவி உப்பால் துபாயில் உள்ள போலீசாரிடம் சிக்கியுள்ளார். கடந்த வாரம் ரவி உப்பாலை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி துபாய் போலீஸ் சார்பில் அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications