ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் டெல்டா கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
ஒரு புறம் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றால், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை படுக்கை கிடைக்காமல் போவது உள்ளிட்ட காரணங்களாலும் நோயாளிகள் உயிரிழந்தனர்.

டெல்டா கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்தளவு மோசமாக டெல்டா உருமாறிய கொரோனா வகை முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா வகையே மிக வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் டெல்டா கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், உலகின் மற்ற நாடுகளில் டெல்டா கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியா
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவிலும் இப்போது இதே நிலை தான். அங்கு டெல்டா கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் அங்கு 27,913 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஒரே நாளில் பதிவான வைரஸ் பாதிப்புகளில் இது தான் அதிகம். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

63 பேர் பலி
இந்நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜாவாவில் உள்ள சர்ஜிடோ மருத்துவமனையில் மட்டும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்த மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வந்ததாகவும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் சமாளிக்க முடியவில்லை என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா அரசு நடவடிக்கை
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. மேலும், தொழிற்சாலை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்வது பற்றியும் ஆலோசனை செய்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications