முதுகில் குத்தும் புதின்? பாகிஸ்தானுடன் கைகோர்த்து செய்யும் வேலை.. இந்தியாவுக்கு புது சிக்கல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நம்முடன் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்டது. நம் நாடும், ரஷ்யாவும் சேர்ந்து தயாரித்த பிரமோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தானுக்கு அடி கொடுக்கப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது ரஷ்யா - பாகிஸ்தான் உடன் கைகோர்த்துள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே காலம் காலமாக நல்ல உறவு உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது முதல் தற்போது பாஜக ஆட்சி வரை அனைத்து ஆட்சியாளர்களும் ரஷ்யாவுடன் சிறப்பான நட்பை தொடர்ந்து வருகின்றனர். நம் நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

Pakistan Russia India

சமீபத்தில் பாகிஸ்தானுக்கும், நமக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு பதிடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு ஏவுகணைகளை வீசி பாகிஸ்தானை கலங்கடித்தது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதுதவிர விமானப்படை, ராணுவதளம் என்று மொத்தம் 11 இடங்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு நம் நாடு பிரமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியது. இது நம் நாடும், ரஷ்யாவும் சேர்ந்து தயாரித்த ஏவுகணையாகும். அதேபோல் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்களை எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் வானிலேயே இடைமறித்து அழித்தது. இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமும் ரஷ்யாவின் தயாரிப்பு தான்.

பாகிஸ்தான் மீதான தாக்குதலில் நாம் வெல்ல ரஷ்யாவின் ஆயுதங்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்தன. இதனால் கூடுதலாக எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை ரஷ்யாவிடம் இருந்து வாங்க நம் நாடு முடிவு செய்துள்ளது. இப்படி, நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நெருங்கிய பந்தம் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது பரபரப்பான இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ரஷ்யா திடீரென்று பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதாவது பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் கார்ப்பரேஷன் என்ற இரும்பு அலை உள்ளது. இந்த ஆலையை பாகிஸ்தான் ஸ்டீல் என்று சுருக்கமாக கூறுவார்கள். இந்த ஆலையை அமைக்க பாகிஸ்தானுக்கு சோவியத் யூனியன் உதவி செய்தது.

இந்த ஆலையில் இருந்து 1.1-5 மில்லியன் டன் வரை எஃகு மற்றும் கனரக உலோகங்கள் தயாரிக்கப்பட்டன. பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான இந்த ஆலை முதலில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் நாளடைவில் ஆலை சரியாக நிர்வகிக்கப்படவில்லை. 2.14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. கடந்த 2015ம் ஆண்டில் இந்த ஆலை மூடப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த ஆலைக்கு ரூ.345 மில்லியனுக்கு கடன் உள்ளது. இதனால் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை.

இப்படியான சூழலில் தான் அந்த ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது. ரஷ்யா தூதர் டெனிஷ் நஸ்ரூவேவ் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே இதுதொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலையை மேம்படுத்தி நவீனப்படுத்துவது தான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாக உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் பெரியஅளவில் பலன் பெற உள்ளது. இந்த ஆலையின் காரணமாக பாகிஸ்தானின் ஸ்டீல் இறக்குமதி என்பது 30 சதவீதம் வரை குறையும். அதோடு வெளிநாட்களில் செலவிடப்படும் பணம் என்பது 2.6 பில்லியன் அளவுக்கு குறையும்.

அதுமட்டுமின்றி ரஷ்யா - பாகிஸ்தான் உறவு வலுப்படும். இந்த உறவு என்பது வெறும் இந்த ஆலை மட்டுமின்றி தொடர்ந்து பாதுகாப்பு துறை, வர்த்தகம் வரை செல்லலாம். நம் நாடு ரஷ்யாவின் ஆயுதங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அது பாகிஸ்தானுக்கும் கிடைக்கலாம். இது நம் நாட்டுக்கு பெரும் தலைவலியாக மாறும். இதனால் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை என்பது நம் நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுதாரித்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வார்னிங் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+