உலகமே கொரோனா அச்சத்தில் நடுங்க.. அமைதியாக இருக்கும் ரஷ்யா.. என்ன நடக்கிறது புடின் நாட்டில்!?

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் ரஷ்யா மட்டும் இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்காமல் இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் ரஷ்யா மட்டும் இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்காமல் இருக்கிறது. அங்கு தற்போதுதான் வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. உலக நாடுகளும் ரஷ்யாவை இதில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

Recommended Video

    'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

    கொரோனா வைரஸ் உலகம் முழுக்க ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் என்று வித்தியாசம் இல்லாமல் தாக்கி வருகிறது. ஈரான், சீனா, இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியா என்று எல்லா நாடுகளையும் இந்த வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிறது.

    இந்தியாவில் இந்த வைரஸ் 125 பேருக்கு தாக்கியுள்ளது. உலகம் முழுக்க இந்த வைரஸ் 182726 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 7177 பேர் இதுவரை உலகம் முழுக்க இந்த வைரஸால் பலியாகி உள்ளனர்.

    ரஷ்யா எப்படி

    ரஷ்யா எப்படி

    ஆனால் ரஷ்யாவில் மட்டும் இந்த வைரஸ் பெரிய அளவில் வேலையை காட்டவில்லை. முதலில் இந்த வைரஸ் தாக்குதல் ஒரு பயோ வார் என்று சந்தேகிக்கப்பட்டது. சீனாவிற்கு எதிராக ஏதாவது ஒரு நாடு இந்த போரை துவங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவே இந்த போரை துவங்கி இருக்கலாம். சீனாவின் வளர்ச்சியை தடுக்க ரஷ்யா இப்படி செய்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

    ஆனால் எப்படி

    ஆனால் எப்படி

    ரஷ்யாவும் இதற்கு ஏற்றபடி கொரோனா விஷயத்தில் அமைதியாக இருந்தது. கொரோனா குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பெரிதாக சோதனைகள் செய்யவில்லை. முக்கியமாக கொரோனாவால் உலக நாடுகள் நடுங்கும் போது அதை பற்றி ரஷ்யா கவலை அடையவில்லை. எல்லாம் போக ரஷ்ய அதிபர் புடின் இதன் மூலம் தன் பதவியை நீட்டித்துக் கொள்ள முயன்று வந்தார்.

    என்ன அச்சம்

    என்ன அச்சம்

    இதனால் ஒருவேளை ரஷ்யாதான் இந்த வைரஸை உருவாக்கியதா ? இவ்வளவு தில்லாக ரஷ்யா சந்தோசமாக இருக்கிறதே என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதேபோல் மார்ச் முதல் வாரம் வரை ரஷ்யாவில் கொரோனா வைரஸ் யாருக்கும் ஏற்படவில்லை. அங்கு மக்கள் நிம்மதியாக இருந்தனர். இது ரஷ்யாவிற்கு எதிரான சந்தேகத்தை அதிகரித்தது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் முக்கிய திருப்பம் நிகழ்ந்தது.

    முதல் நபர்

    முதல் நபர்

    அதன்படி ரஷ்யாவில் முதல் நபருக்கு கொரோனா தாக்கியது. அதன்பின் வரிசையாக ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கு 45 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா மீது இருந்த சந்தேகம் போனது. நேற்று திடீர் என்று ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அங்கு தற்போது 99 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ரஷ்யா இல்லை

    ரஷ்யா இல்லை

    இதனால் இந்த வைரஸை ரஷ்யா உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இந்த வைரஸ் பயோ வார் செய்வதற்காக உருவாக்கப்பட்டு இருக்காது. பெரும்பாலும் இந்த வைரஸ் வெளவால்கள் மூலம் பரவி இருக்கலாம். இயற்கையாக உருவான வைரஸாக இது இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+