சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து! களமிறங்கிய ஹெலிகாப்டர்! நெதர்லாந்தில் பதற்றம்
ஆம்ஸ்டர்டாம்: உலகிலேயே அமைதியான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆம்ஸ்டர்டாம் நகரில் திடீரென கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. பொது இடத்தில் நடந்து சென்றவர்களை அடையாளம் தெரியாத நபர் தாறுமாறாகக் கத்தியால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே சர்வதசே அளவில் அமைதியான நாடுகள் லிஸ்டை எடுத்தால் அதில் ஐரோப்பிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும். ஐரோப்பிய நாடுகளில் வன்முறைகளே பெரியளவில் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிலும் பொது இடங்களில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. அப்போதும் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. பொது இடத்தில் நடந்து சென்ற மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அங்குள்ள டேம் சதுக்கம் என்ற இடத்தில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக ஆம்ஸ்டர்டாம் போலீசார் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மர்ம நபர் சாலையில் நடந்து செல்வோரை திடீரென தாறுமாறாகக் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். 14 ரோந்து கார்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் பல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்குச் சுற்றியுள்ள இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications