விமானம் ஓட்டும்போதே மயங்க மருந்து கொடுத்தார்கள்.. அமெரிக்காவில் பெண் விமானி பாலியல் வன்புணர்வு
அமெரிக்காவில் பெண் விமானி ஒருவர், சக ஆண் விமானியால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் பெண் விமானி ஒருவர், சக ஆண் விமானியால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்.
அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த சம்பவம் அந்த விமான நிறுவனத்திற்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.
ஆனால் 6 மாதமாக பல புகார்கள் அளித்தும் அவர்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது அந்த பெண் விமானி வழக்கு தொடுத்துள்ளார்.

மூன்று நாள் ஒப்பந்தம்
சென்ற வருடம் ஜூன் மாதம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக வேலை செய்ய பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இவர்கள் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மயக்கம் அடைய வைத்தார்
இந்த நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி மது கொடுத்துள்ளார். ஆனால் அந்த மதுவுடன் நிறைய மயக்க மருந்தும் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விமானம் ஓட்டும் போதே அந்த பெண் விமானி மயங்கி விழுந்துள்ளார்.

வன்புணர்வு
விமானத்தை தரையிறக்கிய பின் அந்த ஆண் விமானி, பீனாவை தன் சொந்த அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமை படுத்தி இருக்கிறார். அவருக்கு நினைவு தெரிந்த பின்பே இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்துள்ளது.

வழக்கு தொடுத்தார்
தற்போது அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக பீனா வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு முன்பு ஏற்கனவே பெண் விமானிகளை இப்படி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று இவர் கூறியுள்ளார். அந்த பெண்களின் வாக்குமூலம் தன்னிடம் இருப்பதாகவும் பீனா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications