தவறுகளை ஒப்புக் கொண்டு நாளிதழில் விளம்பரம் கொடுத்த கொலையாளி.. 300 கொலைகள் பற்றி வாக்குமூலம்
அமெரிக்காவை சேர்ந்த கொலையாளி ஒருவர் தான் செய்த கொலைகள் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
Recommended Video

கரோலினா: அமெரிக்காவை சேர்ந்த கொலையாளி ஒருவர் தான் செய்த கொலைகள் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தின் மூலம் 'டோட் கோல்ஹீப்' என்ற அந்த நபர் போலீசிடம் மாட்டி உள்ளார்.
தற்போது அவர் இந்த விளம்பரம் கொடுத்தற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளார். மேலும் எத்தனை கொலைகள் செய்தேன், எப்படி செய்தேன் என்று அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த செய்திக்கு வந்த பின் சிலர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர் 300க்கும் அதிகமான கொலைகள் செய்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பத்திரிக்கையில் விளம்பரம்
அமெரிக்காவை சேர்ந்த 'டோட் கோல்ஹீப்' என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் ஒன்று கொடுத்துள்ளார். அதில் தன் வீட்டில் நிறைய பெண்களை கொலை செய்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் போலீஸ் அவர் வீட்டில் சோதனை செய்ததில் உண்மையிலேயே அவர் வீட்டில் நிறைய பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரே இடத்தில் 7 பேர்
முதலில் போலீஸ் இது பொய்யான விளம்பரமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கடந்து போக நினைத்து இருக்கிறது. ஆனால் அவர் வீட்டில் சோதனை செய்த போது ஒரே அறையில் மொத்தம் 7 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனவர்கள். அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பு மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

பெண் வாக்குமூலம்
இந்த நிலையில் இன்னொரு அறையில் ஒரேயொரு பெண் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். அவருடைய தலை மட்டும் ஒரு சிறிய அடைப்பானுக்குள் வைக்கப்பட்டு மூச்சு விடும்படி துளைகள் போட்டு 1 வருடத்திற்கும் மேலாக அதே மாதிரி வைக்கப்பட்டு இருக்கிறார். அந்த பெண் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி அந்த கொலைகாரன் 300க்கும் அதிகமான கொலைகள் செய்துள்ளதாக தன்னிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மிகவும் பழைய கொலை
இவர் வெவ்வேறு இடங்களில் நடந்த பழைய கொலைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்துள்ளார். அமெரிக்காவில் தீர்க்கப்படாமல் இருந்த பெட்ரோல் பங்கில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இவரை போலீஸ் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறது.

தண்டனை
நீதிமன்றம் அந்த கொலைகாரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறது. மேலும் 60 ஆண்டுகள் கூடுதல் தண்டனையும் வழங்கியுள்ளது. அந்த கொலைகாரன் தனது வாக்குமூலத்தில் ''போலீஸ் என்னை பிடித்திவிடும் என்று தெரியும். தூக்குத்தண்டனையில் இருந்து தப்பிக்கவே வாக்குமூலம் அளித்து ஒப்புக் கொண்டேன்'' என கூறியுள்ளார்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications