நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு.. அரபு நாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
சனா: கொலை குற்றச்சாட்டில், கேரளாவை சேர்ந்த செவிலியர் (Kerala Nurse) நிமிஷா பிரியாவுக்கு (Nimisha Priya) மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு குறித்து அரபு செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கும் விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
நீண்ட காலமாக ஏமன் நாட்டில் செவிலியராக வேலை பார்த்து வந்த நிமிஷா பிரியா, மருத்துவமனை ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அந்நாட்டு சட்டப்படி மருத்துவமனை தொடங்க வேண்டும் எனில், அந்நாட்டின் குடிமகன் ஒருவர் அதில் பங்குதாரராக இருக்க வேண்டும். எனவே தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து மருத்துவமனை தொடங்கப்பட்டது.

நிமிஷாவின் தண்டனை
இப்படி இருக்கையில், திடீரென 2017ம் ஆண்டு மஹ்தி கொலை செய்யப்படுகிறார். இந்த கொலைக்கு காரணம் நிமிஷாதான் என்று குற்றம்சாட்டப்பட்டு 2020ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2025ல் ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
நிமிஷா பிரியாவை பற்றி அரபு ஊடகங்கள்
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து அரபு ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள், கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன. கல்ஃப் நியூஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், "மஹ்தி தனது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு தன்னை சித்திரவதை செய்ததாக பிரியா குற்றம்சாட்டியுள்ளார். எனவே ஏமனை விட்டு தப்பிக்க முயன்றிருக்கிறார். இதற்காக மஹ்திக்கு மயக்கு மருந்து கொடுத்திருக்கிறார்.
கொலையும் குற்றச்சாட்டும்
மயக்க மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. மஹ்தி மயக்கமடைந்த பின்னர், அவரை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டிக்குள் வீச முயன்றிருகிறார். ஏமனிலிருந்து தப்பிக்க முயன்று சவுதி எல்லையில் பிடிபட்டிருக்கிறார்.
ஏமனில், மரண தண்டனையிலிருந்த விடுபட வேண்டும் எனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடைய மன்னிப்பு அவசியம். இதற்காக குற்றவாளி பணத்தை கொடுப்பார். இது ரத்த பணம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் குடும்பத்தினர் உறுதியாக இருக்கிறார்கள்" என தெரிவித்திருக்கிறது.
இநதியாவுக்கு உறவு கிடையாது
அதேபோல அல்-அரபிக் செய்தி ஊடகம் கூறுகையில், "ஏமனில் இந்திய தூதரகம் இல்லை. இங்கு ஹவுதிக்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனை இந்தியா ஏற்கவில்லை. எனவே, இந்தியா ராஜதந்திர ரீதியில் தலையிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறது.
அல்-மவ்கே போஸ்ட் எனும் அரபு ஊடகம் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், "பிரியா ஏற்கெனவே கொலை பழியை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரத்த பணம் தொடர்பாக நீண்ட காலமாக குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பணத்தை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்க திட்டமிட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன" என்று தெரிவித்திருக்கிறது.
சில அரபு ஊடகங்கள் நிமிஷாவை குற்றவாளியாக காட்டுகின்றன. சில, வழக்கின் விவரங்களை அப்படியே கொடுக்கின்றன. ஆனால் இந்திய ஊடகங்கள்தான் நிமிஷா பக்கம் இருக்கும் நியாயத்தை பேசுகின்றன. ஆதரவற்ற நாட்டில், நம்பியவரே நமக்கு துரோகம் செய்யும்போது வெடித்து எழாமல், அதே சூழலில் எப்படி அடைப்பட்டு இருக்க முடியும்?
அதைத்தான் நிமிஷா செய்திருக்கிறார். அவர் செய்தது குற்றம் எனில், அவருக்கு நடந்து என்ன? அதை எப்படி நியாயப்படுத்த முடியும்? என்கிற தார்மீக கேள்விகளையும் நாம் மட்டும்தான் எழுப்புகிறோம்.
எது எப்படி இருப்பினும் பிரியாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications