9/11 தாக்குதல்: சிறையிலடைக்கப்பட்ட அப்பாவிகள் யு.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடரலாம்!!
நியூயார்க்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலின் போது சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அப்பாவி அரேபியர்கள், இஸ்லாமியர்கள் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானங்கள் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்கி அழித்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஏராளமான அப்பாவி அரேபியர்கள், இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

நீண்ட விசாரணைகளுக்குப் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்டோர், முஸ்லிம்கள், அரேபியர்கள், தென்னாசிய நாட்டவர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்; பின்னர் 23 மணிநேரம் தொடர் சித்திரவதை செய்தனர். உறங்கவே விடாமல் உடைகளைக் களைந்தும் பல்வேறு வகையிலும் சித்ரவதை செய்தனர் என்று முறையிட்டிருந்தனர். ஆனால் இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ரோஸ்மரி பூலெர், ரிச்சர்ட் வெஸ்லி, அரேபியர், முஸ்லிம்கள் என தோற்றமளித்த காரணத்தாலேயே இத்தகைய சித்ரவதைகளை செய்வதற்கு அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பளித்தனர். அத்துடன் அப்போதைய புஷ் ஆட்சிக்கால அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்க்ராப்ட், எஃப்.பி.ஐ. இயக்குநர் ராபர்ட் முல்லர் உள்ளிட்டோர் மீது பாதிக்கப்பட்ட 9/11 கைதிகள் வழக்கு தொடர முடியும் எனவும் தீர்ப்பளித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications