தம்பதிகள் ஒன்றாக தூங்கக் கூடாது, கட்டி அணைக்க கூடாது, முத்தமிட கூடாது.. ஷாங்காயில் வினோத விதிகள்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ள வேண்டாம், கட்டி பிடிக்க வேண்டாம், ஒன்றாக படுத்து தூங்க வேண்டாம் உள்ளிட்ட விதிகளை விதித்துள்ளது பெரும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உருவானது. இதையடுத்து அது உலக நாடுகளில் பரவியது. மற்ற நாடுகளில் பரவிய நிலையில் சீனாவில் குறைந்துவிட்டது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வுகானில் தொற்று அதிகரித்ததை போல் இந்த ஆண்டு ஷாங்காய் நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

ஷாங்காய்
ஷாங்காயில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் அது கொரோனா பரிசோதனைக்கு மட்டுமே வர வேண்டும் என தெரிவித்துள்ளது. மக்கள் நெரிசல் அதிகமான பகுதிகளில் சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஆளில்லா விமானங்கள்
சிறிய ஆளில்லா விமானங்கள் மூலம் சீன சுகாதாரத் துறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உங்கள் ஆசையை சிறிது காலத்திற்கு ஒத்தி வையுங்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள்
ஷாங்காய் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி வீடுகளில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டாம். அனைவரும் தனித்தனியாக உறங்க வேண்டும், தம்பதிகள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நெட்டிசன்கள் கிண்டல்
குறிப்பாக முத்தமிட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்கள். இந்த விதிகளை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஷாங்காயில் உள்ள மக்கள் இறைச்சி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்குவதற்கு கடும் அவதிப்படுகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications