இந்த 3 விஷயங்கள் ரொம்ப ஆபத்து.. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? எச்சரிக்கை கொடுத்த WHO! பரபர தகவல்
ஜெனீவா: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரான் குறித்து உலக சுகாதார அமைப்பு சில முக்கிய எச்சரிக்கைகள் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நம்மிடையே பரவி தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் இதுவரை இந்த கொரோனா வைரசை எந்தவொரு நாடும் கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்கவில்லை.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஓமிக்ரான்
அப்படி தான் கடந்த டிசம்பர் மாதம் உலக நாடுகளிடையே ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா, அப்படியே உலகெங்கும் பரவியது. இந்தியாவிலும் கூட இந்த ஓமிக்ரான் கொரோனா தான் 3ஆம் அலையை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும், டெல்டா கொரோனாவை போல ஓமிக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், சில வாரங்களிலேயே பல நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தச் சூழலில் சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

உலக சுகாதார அமைப்பு
இதனிடையே கொரோனா பெருந்தொற்று குறித்தும் பரவும் தவறான தகவல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு, இதுபோல பரவும் தவறான தகவல்கள் காரணமாகவே கொரோனா பாதிப்பு இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ், "பெருந்தொற்று காலம் முடிந்துவிட்டது. ஓமிக்ரான் இனி லேசான பாதிப்பையே ஏற்படுத்தும். அதேநேரம் இது தான் கடைசி உருமாறிய கொரோனா என்பது போல பல தவறான தகவல்கள் பரவுகின்றன.

3 தகவல்கள்
இப்படி ஏராளமான தவறான தகவல்கள் இங்குப் பரவுகின்றன. குறிப்பாக 3 ஆபத்தான மற்றும் பொய்யான தகவல்கள் இணையத்தில் பரவுகின்றன. அதாவது ஓமிக்ரான் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாக முடிந்துவிட்டது. ஓமிக்ரான் தான் இங்குப் பரவும் கடைசி உருமாறிய கொரோனா என்பது போலப் பல தவறான தகவல்கள் இங்குப் பரவுகின்றன. இதுபோன்ற தகவல்கள் கடும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. ஓமிக்ரான் கொரோனாவும் தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கொரோனா குறித்துப் பரவும் பொய்யான தகவல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்க வேண்டும்.

கொரோனா வேக்சின்
அதேபோல மக்கள் அனைவரும் கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா வேக்சின்கள் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, அனைவரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை BA.2 கொரோனா தான் வேகமாகப் பரவக் கூடியதாகத் தெரிகிறது. அதேநேரம் BA.1 உடன் ஒப்பிடும்போது BA.2 தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இருப்பினும், இப்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா கேஸ்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைப் பார்த்து இருப்பீர்கள். இது உயிரிழப்புகள் அதிகமாகக் காரணமாக அமைகிறது" என்றார்.

எப்போது முடியும்
சமீப காலமாகக் கிடைக்கும் தரவுகள் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு சுமார் 8% வரை அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் 1.1 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் 25% வரை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பிரிட்டன் நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா மற்றொரு அலையைக் காட்டும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications