சீனாவால் மீண்டும் ஆபத்து? கொரோனாவின் புதிய வேரியண்ட்கள் வெளிப்படலாம்.. மருத்துவ நிபுணர்கள் அச்சம்
பீஜிங்: சீனாவில் ஒமிக்ரானின் புதிய வகை கொரோனாவான பிஎப் 7 வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் புதிய வேரியண்ட்கள் வெளிப்படலாம் என்றும் அவை கொடிய வைரசாக இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவின் மாறுபாடு அடைந்த பிஎப் 7 வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
அதுவும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோருக்கு சீனாவில் கொரோனா பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம்
மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகள் கூட்டம் ஒருபக்கம் அலைமோதுகிறது என்றால் மற்றொரு பக்கம் சுடுகாடுகளில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் கூட செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவில் மக்களுக்கு போதிய அளவு இயற்கையான தடுப்பூசி கிடைக்காமல் இருப்பது உள்பட பல்வேறு காரணிகள் அந்த நாட்டில் கொரோனா ஈவு ஈரக்கமின்றி பரவுவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

3.7 கோடி பேருக்கு கொரோனா
தினமும் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரவுவதால் கடந்த சில நாட்களாக சீனாவில் பதிவாகி வரும் தினசரி கொரோனா பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலக அளவில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகக் கூட ஒரு செய்தி வெளியாகி அதிர வைத்தது. இதையெல்லாம் மூடி மறைக்க திட்டமிட்ட சீனா தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட போவது இல்லை என்று கூறியிருக்கிறது.

புதிய வகை கொரோனா
கொரோனாவை உலக நாடுகளுக்கு முதன் முதலாக பரப்பி விட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சீனாவின் அஜாக்கிரதையால் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனா வெளிப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது மிகவும் கொடிய வைரசாகவும் இருக்கக் கூடும் என்றும் நிபுணர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேரியண்ட்கள் வெளிப்படும்
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் ஸ்டுவர்ட் கேம்பல் ரேய் கூறும் போது, கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயரும் பட்சத்தில் வைரஸ் பிறழ்வு (mutation) அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. சீனாவை பொறுத்தவரை அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதன் காரணமாக புதிய வேரியண்ட்கள் வெளிப்படும் அபாயம் உள்ளது. கொரோனாவின் புதிய அலைகள் உருவாகும் போது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் வெளிப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்" என்றார்.

பகுதியளவு எதிர்ப்பு சக்தி
கடந்த 2019- ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து கொரோனா முதன் முதலாக வெளிப்பட்ட போது சீனாவை தவிர பிற அனைத்து நாடுகளில் பெரும் பாதிப்பு இருந்தது. அப்போது டெல்டா வகை அடுத்ததாக ஒமிக்ரான் வகை என மாறுபாடு அடுத்தடுத்து அலைகளாக தாக்கத் தொடங்கின. தற்போது வரை ஒமிக்ரான் வகை கொரோனாவின் தாக்கம் உள்ள நிலையில், ஒமிக்ரானில் இருந்து மாறுபாடு அடைந்து இருக்கும் வைரசான பிஎப் 7-தான் தற்போது சீனாவை உலுக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பகுதியளவு எதிர்ப்பு சக்தியை கொண்ட மக்களை கொண்ட சீனாவால் வைரஸ் மாறுபாடுகள் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications