'கூல்' கனடாவில் 120 டிகிரியை தாண்டிய வெப்பம்.. 500 பேர் பலி.. என்ன காரணம்? மற்ற நாடுகளில் ஏற்படுமா
ஒட்டாவா: கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 120 டிகிரியை எட்டியுள்ள நிலையில், இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பருவம் தவறிப் பெய்யும் மழை, அதிகரிக்கும் வெப்பம் ஆகியவற்றால் விவசாயிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனடாவில் சில பகுதிகளில் வெப்ப அலை காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

கனடா வெப்பம்
உலகில் குளிர்ச்சியான நாடுகளில் ஒன்று கனடா அங்குச் சராசரி வெப்பநிலையே 70 டிகிரி பாரன்ஹீட் தான். கோடைக் காலங்களில் கூட அதிகபட்சமாக 90 டிகிரி வரை தான் அங்கு வெப்பம் செல்லும். இது நம் ஊர்களில் வழக்கமாக இருக்கும் வெப்பநிலை. ஆனால், கடந்த ஒரு வாரமாகக் கனடாவில் வெப்ப நிலை திடீரென முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

500 பேர் பலி
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிகபட்சமாக 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்தளவு வெப்பத்தைக் கண்டிராத கனடா மக்கள் இதனால் கடும் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். திடீரென அதிகரித்த வெப்பத்தால் சுமார் 500 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

குறையாது
அடுத்தும் வரும் நாட்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என்றே கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு உயிரிழப்புகளும் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனடா நாட்டில் இதற்கு முன்பு வரை 1937ஆம் ஆண்டு பதிவான 113 பாரன்ஹீட் வெப்பமே அதிகமாக இருந்தது.

ஹோட்டல்கள்
வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஏசி அறைகளில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீடுகளில் ஏசி வசதி இல்லாத மக்கள் ஹோட்டல்களை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

மின் தேவை
மேலும், அங்குள்ள அனைத்து கடைகளிலும் ஏசிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. சிறிய குளிர்சாதன கருவிகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவையும் கனடா நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் மின் இணைப்பில் ஏதேனும் சிறிய சிக்கல் ஏற்பட்டால் கூட அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏன் ஏற்படுகிறது
வலுவான, உயர் அழுத்த வளிமண்டலம் சூடான கடல் காற்றைப் பிடிக்கும்போது ஒரு குவிமாடம் (heat dome) போன்ற ஒன்று ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் வெப்பம் பல மடங்கு அதிகரிக்கிறது கடலின் வெப்ப நிலை அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணம். இந்த நிகழ்வு காரணமாகவே கனடாவில் வெப்பநிலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இவை ஏற்படுவது அதிகரித்துள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் இதுவரை heat domeஆல் வெப்பநிலை இந்தளவு அதிகரித்ததில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications