பயங்கர அணுக்கசிவு.. அமெரிக்க தாக்குதலால் ஏற்படும் அணு ஆயுத பேரழிவு? ரஷ்யா படிச்சு படிச்சு சொன்னதே!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தி உள்ள தாக்குதல்கள் மூலம் அங்கே அணுக்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த தாக்குதல்கள் உலகை அணு ஆயுத பேரழிவை நோக்கி தள்ளும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே அணு கசிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

Israel Iran

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார்.

நடான்ஸ் அணு உலை மீதான தாக்குதல்

நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், "நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது. அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும். கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், யுரேனியம்-235 ஐ 60 சதவீதம் வரை செறிவூட்டும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் மேற்பரப்பு பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்துவிட்டது. அங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம். சேதங்களை மதிப்பிடுவதற்கும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஈரான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் நமது அமைப்பு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

ஈரான் தற்போது நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வசதியில் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலை உள்ளது. அந்த அணு உலையில் உள்ள முக்கிய மற்றும் அவசரகால மின் அமைப்புகள் உட்பட மின்சார உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டதாகக் கூறினார். நிலத்தடி கேஸ்கேட் மண்டபத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றாலும், மின்சாரம் தடைப்பட்டதால் அங்குள்ள coolant பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அதோடு ஃபோர்டோவ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் இஸ்பாஹான் வளாகம் உட்பட பிற இடங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் நடந்ததாக ஈரான் முகமைக்கு தெரிவித்துள்ளது . இந்த வசதிகளில் யுரேனியம் மாற்றும் வசதி, எரிபொருள் தகடு தயாரிக்கும் ஆலை, எரிபொருள் உற்பத்தி ஆலை மற்றும் யுரேனியம் டை ஆக்சைடு (UO2) பவுடர் ஆலை ஆகியவை அடங்கும். இந்த இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவையும் ஐ.ஏ.இ.ஏ ஆய்வு செய்து வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறி உள்ளார்.

இப்போது நிலைமை

ஆனால் இதெல்லாம் போன வாரம் இருந்த நிலைமை.. இப்போது இடங்களை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிட்டது. அமெரிக்கா நேரடியாக இங்கே குண்டுகளை போட்டுவிட்டது. இதனால் ஈரானில் கடுமையான அணு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

நேரடியாக அணு அமைப்புகள் தாக்கப்பட்டு உள்ளதால்.. மொத்தமாக ஈரான் நாட்டில் அணு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஈரான் அணு உலைகள் - ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச சட்டத்தின் பார்வையில் சட்டவிரோதமானது.. இதனால் அணுக்கசிவு ஏற்படும்.. இதன் காரணமாக உலகம் முழுக்க அணு ஆயுத பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கும். இஸ்ரேல் உட்பட உலகம் முழுவதும் இதன் விளைவுகள் எதிரொலிக்கும். இது அணு ஆயுத பேரழிவை நோக்கி தள்ளும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா இஸ்ரேல் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "இஸ்ரேல் தலைவர்கள் விழித்துக்கொண்டு, ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும், ஐ.நா.,வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் அணுசக்தி வளாகத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான அறிக்கையை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறி உள்ளது. .

பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் சில நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சந்தர்ப்பவாத காரணங்களுக்காகவும் செயல்படுகின்றன என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+