இன்றுடன் முடிவடையும் போர் நிறுத்தம்.. ஹமாஸ் எடுக்கும் முக்கிய மூவ்! போர் நிறுத்தம் நிரந்தரமாகுமா?
காசா: ஹமாஸ் வசம் இருக்கும் பணய கைதிகளும், இஸ்ரேல் வசம் இருக்கும் பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்ட நிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தொடர் முயற்சிகளை செய்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றாலும் தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஐநா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் சொன்ன 'சுதந்திர பாலஸ்தீனம்' எனும் அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போதைய மோதலுக்கும் காரணமாக இருக்கிறது.

தொடர் மோதல் போக்கின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், திடீர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சிலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக ஏறத்தாழ 50 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் 6,150 குழந்தைகள் உட்பட 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 38 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தையை உலக நாடுகள் தீவிரப்படுத்தின. கத்தார் இந்த பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்தியது. ஐநா சபையில் சீனாவும், ரஷ்யாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பின. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது. இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை/சிறை கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டன.
கடந்த இரண்டு நாட்களாக சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்பட வேண்டும் என அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் நிரந்தரமாக போரை நிறுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப்போரில் தப்பிய யூதர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் வரும்போது தங்க இடம் கொடுத்தது பாலஸ்தீனம்தான். ஆனால் தங்களுக்கான நாட்டை உருவாக்கிக்கொள்ள பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அதற்கு இஸ்ரேல் என பெயரிட்டுக்கொண்டனர் யூதர்கள். தற்போது பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் நிலைப்பாடு. எனவே காசா மீதான தாக்குதல் மேலும் தொடரத்தான் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலை எதிர்கொள்ள ஹமாஸ் படையினர் சில யுக்திகளை யோசித்துள்ளனர். அதாவது தங்கள் வசம் இருக்கும் இஸ்ரேலிய பணய கைதிகளை கூடுதலாக விடுவிப்பதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இன்றுடன் 4 நாட்கள் போர் நிறுத்தம் முடிவடைவதால், இரண்டாம் கட்டமாக 40-50 பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மேலும் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் முயற்சிக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications