இந்தோனேஷியாவில் பெட்ரோல் லாரி மீது ரயில் மோதி விபத்து: 10 பேர் பலி
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முற்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயிலொன்று, ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முற்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரி தீப்பிடித்து எரிந்தது.

இந்தக் கோர விபத்தில் சிக்கி ரயில் பொறியியலாளர், தொழில்நுட்பவியாளர் உட்பட 10 பலியாகியுள்ளனர், மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என ஜகார்த்தா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமானதாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.
விபத்தின்போது பொறியியலாளர் ரயில் வண்டியை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. இவ்விபத்தின் போது நெருப்புக் குழம்புகள் கிளம்பியதுடன் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாக விபத்தில் காயம்டைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications