யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஹமாஸ் பலமுனை தாக்குதல்.. மேயர் உட்பட 40 இஸ்ரேலியர்கள் பலி!
டெல் அவிவ்: பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், காசா பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை பல முனைகளிலும் சரமாரியாக ஏவியதில், மேயர் உள்பட 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் காசாவில் 198 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் இன்று ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா ஃப்ளட்' என பெயர் சூட்டியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் நேரப்படி காலை 6.30 மணியளவில் தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் என பல முனைகளில் இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் ஓபிர் லிப்ஸ்டீனும் கொல்லப்பட்டுள்ளார். ஐநூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பல முனைகளிலும் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலால், ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பல முனைகளிலும் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலால், ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டெரோட் நகரில் பாலஸ்தீன போராளிகள் வழிப்போக்கர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சமூக ஊடகங்களில் பரவிய காட்சிகள் சீருடையில் பாலஸ்தீனியர்கள் எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்டதைக் காட்டுகின்றன. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் இஸ்ரேலும் தற்போது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் ஹமாஸ் தீவிராதிகள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல்களில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். காசா பகுதியில் 198 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருதரப்பிலும் தற்போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications