நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு.. 5 பேர் பலி! பலர் மாயம்.. மீட்பு பணியில் ராணுவம்
Recommended Video
வெலிங்டன்: நியூசிலாந்தில் ஒரு தீவில் எரிமலை வெடித்ததில், ஐந்து பேர் இறந்தனர் .அந்த தீவில் இன்னும் எத்தனை பேர் மாயம் ஆனார்கள் என்பது குறித்து முழுமையாக கணக்கிப்படவில்லை என்றும், முழு விவரம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வகாரி என்று அழைக்கப்படும் வெள்ளை தீவு, நியூசிலாந்து நாட்டின் மிகச் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும்.
தனியாருக்குச் சொந்தமான இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த தீவினை கடந்துதான் ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் செல்லும்.

வெள்ளைத் தீவு
இந்நிலையில் வெள்ளை தீவில் எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் வெள்ளை தீவு எரிமலையின் பள்ளத்திற்குள் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
|
23 பேர் மீட்பு
அங்கு இதுவரை எரிமலை வெடித்து 5 பேர் பேர் இறந்து போனதாகவும். 23 பேர் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் எரிமலை வெடிப்பு குறித்த விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் மீட்பு பணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நியூலாந்து இராணுவம் போலீசாருக்கு உதவியாக மீட்பு பணியில் இறங்கி உள்ளது.

போலீசார் தகவல்
இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷ்னர் ஜான் டிம்ஸ்,கூறுகையில், எத்தனை பேர் அங்கே இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் "நியூசிலாந்து மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார். தீவில் 50 க்கும் குறைவானவர்கள் இருப்பதாக போலீசார் முன்பு கூறியிருந்தனர். இறந்த ஐந்து பேரும் தீவில் இருந்து மீட்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
|
தீவில் புகைகள்
இதனிடையே எரிமலை வெடித்து சிதறிய வெள்ளைத்தீவில் புகைமூட்டங்கள் விண்ணை முட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. வெள்ளைத்தீவு முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications