ஈராக்கில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் பலி, 45 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 33 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.
ஈராக்கின் வடக்கு மாகாணமான நினேவேயின் தலைநகர் மொசுல் அருகே உள்ளது பாசிகா. இந்த நகரில் நேற்று மதியம் சவ ஊர்வலம் ஒன்று நடந்தது. அப்போது அந்த ஊர்வலத்தில் புகுந்த ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 27 பேர் பலியாகினர், 36 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது தவிர மத்திய ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர் மற்றும் 9 பேர் காயம் அடைந்தனர்.
அபு கிரைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தெருவோரம் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். இது தவிர பாக்தாதில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ரமதி நகரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். மேலும் துஜைல் நகர் அருகே சாலையோரம் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு ஆண், ஒரு பெண் பலியாகினர், 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications