அதிபர் பதவிக்கும் ஆங் சான் சூ கிக்கும் நடுவே நிற்கும்... திருமணம்!
யங்கூன்: வெளிநாட்டவரை திருமணம் செய்த காரணத்தால் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி மியான்மர் அதிபர் ஆக முடியாது.
50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் 25 ஆண்டுகள் கழித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஆங் சாங் சூ கி அதிபராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் மியான்மர் அரசில் உயர் பதவி வகிக்க முடியாது என்று அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. இதனால் சூ கி அதிபராக முடியாது.
சூ கி இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் மகன்கள் இருவரும் இங்கிலாந்து குடிமகன்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து சூ கி கூறுகையில்,
நான் அதிபர் ஆக முடியாவிட்டாலும் உரிய நபரை அதிபர் ஆக்குவேன். அரசின் முக்கிய முடிவுகளை ஆளுங் கட்சி தலைவர் என்ற முறையில் நான் எடுப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications