Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய மாணவர்களுக்கு செக் வைத்த ஆஸ்திரேலியா, கனடா.. பின்னணியில் இவ்வளவு அரசியல் இருக்கா

Subscribe to Oneindia Tamil

கேன்பெரா: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து சராசரியாக 10 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, யூகே, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா,தென்கொரியா, சவுதி அரேபியா நாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு உச்சவரம்பை சில நாடுகள் விதித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் ஆஸ்திரலியாவும் இணைந்திருக்கிறது.

ஆஸ்திரேலியா அரசு 2025 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 2025ம் ஆண்டுக்கு 2,70,000 மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்கு அதிகளவு உயர்கல்வி பயில செல்கின்றனர். இதனால் அவர்கள் குடிபெயர்வதைத் தடுப்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

australia

இதுகுறித்து ஆஸ்திரேலியா கல்வித் துறை அமைச்சர் ஜேசன் க்ளேர் செய்தியாளர்கள் சந்திப்பில், "ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவே தனியார் கல்லூரிகளில் 50 சதவீதம் வரை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் சீர்திருத்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் குடிபெயர்வு 5,48,800 ஆக உயர்ந்துள்ளது. இது ஜூன் மாதம் 5,18,000 ஆக இருந்தது. இதுவரை இல்லாதளவுக்கு குடிபெயர்வு 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கொரோனா தொற்றில் ஏற்பட்ட சரிவை சமாளிப்பதற்காக ஆஸ்திரேலியா அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு குடிபெயர்வு முறையை அதிகரிக்க திட்டமிட்டது. அங்குள்ள வணிக நிறுவனங்களில் ஊழியர்களை அதிகரிப்பதற்காக குடிபெயர்வு முறையை ஊக்கப்படுத்தினர்.

பெரும்பாலும் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி படிக்க சென்றனர். எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி விசா பெறும் முறையை கடுமையாக்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியா அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுப்பதில் கல்வித்துறை நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த 2022 - 2023 வரை வெளிநாட்டு மாணவர்கள் மூலம் சுமார் 25 பில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இப்படி இருக்கும்போது இது கல்வித்துறையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே கனடா நாட்டு அரசும் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிக்க செக் வைத்துள்ளது. அதன்படி மொத்த அட்மிஷன்களில் 30 சதவீதம் மட்டுமே வெளிநாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரானா தாக்கத்துக்கு பிறகு ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதாம். ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் சொத்துகளின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு வெளிநாட்டவர்களின் வருகையே காரணம் என்று உள்ளூர் மக்கள் புகார் கூறுகிறார்கள். மேலும் இரண்டு நாடுகளிலும் அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளது. அதை மனதில் வைத்துதான் அந்த நாடுகளின் ஆளுங்கட்சிகள் மக்களை கூலாக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனவாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+