வேலை நேரம் முடிந்த பின்னர் வரும் ஆபிஸ் அழைப்புகளை நிராகரிக்கலாம்! ஆஸ்திரேலியாவில் புது சட்டம்

Subscribe to Oneindia Tamil

கான்பெரா: வேலை நேரம் முடிந்த பின்னர், அலுவலகத்திலிருந்தும், முதலாளிகளிடமிருந்தும் வரும் அழைப்புகளை துண்டிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உள்ளது என ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியிருந்தது. இந்த சட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை உழைப்பு சுரண்டல்தான். அதாவது, குறிப்பிட்ட சம்பளத்தை பேரம் பேசி, குறிப்பிட்ட நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், வேலைக்கு வந்த பின்னர், பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தொழிலாளர்களை முதலாளிகள் கூடுதல் வேலை வாங்குகின்றனர். சம்பளத்தை மீறி, கூடுதலாக வாங்கப்படும் வேலைகள் அனைத்தும் உழைப்பு சுரண்டல்தான்.

Australia Labour Jobs

ஒரு நாளைக்கு தொழிலாளர்களின் அதிகப்பட்ச வேலை நேரம் என்பது 8 மணி நேரம்தான். ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய தொழில் நிறுவனங்களை தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் இதனை பின்பற்றுவதில்லை. 9-10 மணி நேரம் வேலை என நிறுவனங்கள் இஷ்டத்திற்கு நேரத்தை வைத்துக்கொள்கின்றன. மட்டுமல்லாது, இந்த நேரத்தை தாண்டியும் கூடுதல் நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில், இந்த கூடுதல் நேரம் வேலை வாங்குவதை தவிர்க்க புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில், அலுவலகத்திலிருந்தோ, முதலாளியிடமிருந்தோ அழைப்புகள் வந்தால் அதை நிராகரிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை Right to Disconnect சட்டம் உறுதி செய்கிறது. இப்படியான அழைப்புகளை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்பட்சத்தில் அவர்கள் அலுவலகத்திடமோ, முதலாளியிடமோ இது குறித்து விளக்கம் கேட்கலாம். இந்த அழைப்புகள் தொடரும்பட்சத்தில், அவர்கள் நியாய வேலை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கான உரிமையை பெற முடியும்.

இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். இன்று உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதார சமமின்மைக்கு இந்த உபரி உழைப்புதான் காரணமாக இருக்கிறது. இன்னும் விளக்கமாக சொல்வதெனில், 8 மணி நேர வேலையில் 4 மணி நேரத்தில், முதலாளி, தொழிலாளியின் உழைப்பு மூலம் தான் போட்ட முதலீட்டை எடுத்துவிடுகிறான். மீதமுள்ள 4 மணி நேரம் என்பது முதலாளிக்கான லாப நேரமாகும். இதுவே கூடுதலாக மேலும் 2-3 மணி நேரங்கள் நீடிக்கப்படும்போது அது கூடுதல் லாபத்தை முதலாளிக்கு கொடுக்கிறது.

ஆனால், இந்த லாபத்தில், அதை உருவாக்கிய தொழிலாளிக்கு எந்த பங்கும் கிடைப்பதில்லை. எனவே நியாயமான வேலை நேரத்தை உறுதி செய்யும் விதமாக ஆஸ்திரேலியா கொண்டு வந்திருக்கும் சட்டம் வரவேற்கத்தக்கது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+