மாணவிகளே ஓடாதீங்க, கன்னித்தன்மை போயிடும்: இஸ்லாமிய பள்ளி முதல்வர் உத்தரவு
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓடினால் கன்னித்தன்மையை இழந்துவிடுவார்களாம்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ளது அல் தக்வா இஸ்லாமிய பள்ளி. அந்த பள்ளியின் முதல்வர் உமர் ஹல்லாக் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளார். மாணவிகள் அதிகம் ஓடினால் அவர்கள் கன்னித்தன்மையை இழந்துவிடுவார்கள் என்று உமர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயத்தில் மாணவிகளை அவர் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அந்த போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி பெற்ற மாணவிகள் உமரின் பேச்சை கேட்டு சோர்வடைந்தனர். தங்களை போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கூறி அவர்கள் உமருக்கு கடிதம் எழுதியும் பலனில்லை.
மேலும் மாணவிகள் கால்பந்து விளையாடுகையில் கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டால் அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்று நம்புகிறார் உமர்.இந்நிலையில் அந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் உமரின் நடவடிக்கைகள் பற்றி கல்வி அமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளார். இது குறித்து விக்டோரியா மாநில கல்வி அமைச்சர் ஜேம்ஸ் மெர்லினோ கூறுகையில், உமர் மீதான புகார் உண்மை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications