இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்.. ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பது.. இனி சிரமம்தான்!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில், முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. இந்நிலையில், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து கல்வி பயில்வதில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருக்கிறது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவர்கள்? என்பதை அளவீடு செய்வதுதான் 'மாணவர் விசா மதிப்பீடு' என்று சொல்லப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் மொத்தம் 3 நிலைகள் இருக்கின்றன.

Australia student India
  • AL1 - குறைந்த ஆபத்து
  • AL2 - மிதமான ஆபத்து
  • AL3 - மிகுந்த ஆபத்து

என்ன பிரச்சனை?

இந்த நிலையின் கீழ் உள்ள நாடுகளிலிருந்து, மாணவர்கள் கல்வி பயில ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் மிக குறைந்த ஆவணங்களை சமர்ப்பித்தாலே போதும். விசா எளிதில் கிடைத்துவிடும். அதேபோல AL2 - மிதமான ஆபத்து நிலையில் உள்ள நாடுகளில் இருந்து மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்புகிறார்கள் எனில், ஓரளவு தேவையான ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதும்.

AL2 நாடுகளிலிருந்து விண்ணப்பித்தால்

இப்படி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், 75% 29 நாட்களிலும், 48 நாட்களில் 90% விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். மட்டுமல்லாது இந்நாடு மாணவர்களின் விண்ணப்பங்கள் பெரும்பாலும் கணினி மூலமாகவே சரிபார்க்கப்பட்டு விசா வழங்கப்படும். ஏதேனும் சிறு ஆவணங்கள் விடுபட்டிருந்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாமல், ஆவணங்களை சேர்க்க அறிவுறுத்தப்படும். இந்தியா இந்த கேட்டகிரியில்தான் நீண்ட காலமாக இருந்தது.

AL3 நாடுகளிலிருந்து விண்ணப்பித்தால்

ஆனால், AL3 லிஸ்ட்டில் உள்ள நாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எளிதில் விசா கிடைக்காது. இந்த லிஸ்ட்டில்தான் தற்போது இந்தியாவின் பெயர் சேர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் படித்திருக்கிறீர்கள், மேற்படிப்புக்காக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கிறீர்கள் எனில், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மேனுவலாக பரிசோதனை செய்யப்படும். அந்நாட்டின் அதிகாரிகள் நேரடியாக நீங்கள் படித்த பள்ளிகளுக்கு போன் செய்து விசாரிப்பார்கள். மட்டுமல்லாது அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய மாணவர்களுக்கு சிக்கல்

அதேபோல ஆஸ்திரேலியாவில் தங்கி பயிலும் ஒரு மாணவருக்கு தோராயமாக ரூ.16.5 லட்சம் செலவாகும். இது தவிர படிப்பு செலவு மற்றும் பயண செலவுகளும் இருக்கின்றன. திடீரென்று மாணவரின் வங்கி கணக்கில் இவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தாலும் விசா நிராகரிக்கப்படும். குறைந்தது 3-6 மாதங்கள் இந்த பணம் அவரது வங்கி கணக்கில் இருந்திருக்க வேண்டும்.

கால தாமதம்

AL2 லிஸ்ட்டில் உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறீர்கள் எனில், நீங்கள் ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதற்கான பள்ளி சான்றிதழ் கொடுத்தால் போதுமானது. ஆனால், AL3 லிஸ்ட்டில் உள்ள நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கிறீர்கள் எனில், IELTS (6.0) PTE (50)போன்ற ஆங்கில புலமைக்கான சான்றிதழை காட்ட வேண்டும்.

மட்டுமல்லாது இந்த விண்ணப்பங்களை சரிபார்க்க 8-12 வாரங்கள் வரை ஆகலாம். மட்டுமல்லாது இந்த நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வயது வரம்பு குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா ஏன் இதில் சேர்க்கப்பட்டது

கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் இணைத்திருந்த வங்கி கணக்கு எண், கல்வி சான்றிதழ் ஆகியவை போலியானவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. கேரளாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு 22 பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி சான்றிதழ்களை வழங்கிய ஒரு கும்பலை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த விஷயம், இந்தியாவை AL2 லிஸ்டில் சேர்க்க முக்கிய காரணமாகும்.

ஆஸ்திரேலியாவிலும் கட்டுப்பாடுகள்

ஏற்கெனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் விசா கட்டுப்பாடுகள் கடினமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே இங்கு விசா கிடைக்காதவர்கள், ஆஸ்திரேலியாவில் கல்வி பயில முயன்றனர். இப்படி இருக்கையில்தான் தற்போது ஆஸ்திரேலியாவிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் ஜன.8 முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+