கிடைத்துள்ள சிக்னல்கள் மாயமான விமானத்தினுடையது தான்... ஆஸி. பிரதமர் நம்பிக்கை
சிட்னி: கடலில் தற்போது கிடைத்து வரும் சிக்னல்கள் மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்.
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் ‘எம்எச் 370' இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மாயமான விமானம் குறித்து உலா வரும் பல முரண்பட்ட தகவல்களுக்கு விடை சம்பந்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதற்குத் தகுந்தார்போல், இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டியின் சிக்னல் கிடைக்கப் பெற்றதாக தகவல் வெளியானது. எனவே, அந்த ஒலியின் மூலம் கறுப்பு பெட்டி கிடக்கின்ற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் ஈடுபட்டுவருகின்றன.
மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்' சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது.
இந்நிலையில், கிடைக்கப் பெற்றுள்ள இந்த நான்கு சிக்னல்களுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தத் தேடுதல் வேட்டை நடைபெறுவதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications