Australia Social media ban: சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை! எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது ஆஸி.? சவால்கள் இதுதான்
கான்பரா: சோஷியல் மீடியாகளில் வரும் கன்டென்ட்கள், வீடியோக்கள் வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியா அரசு, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இனி சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்திருக்கிறது. நாங்கள் 16 வயதை கடந்தவர்கள்தான் என்று போலியான அடையாளங்களை கொடுத்து சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தினால் என்ன செய்ய முடியும்? அரசு இதை எப்படி தடுக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
சோஷியல் மீடியாக்கள் லாபம் இல்லாமல் இயங்குவது கிடையாது. அது இயங்க வேண்டும் எனில், குறிப்பிட்ட அளவுக்கு லாபம் வேண்டும். பயனாளர்கள் எவ்வளவு நேரம் இதில் செலவழிக்கிறார்கள் என்பதை பொறுத்தே லாபம் இருக்கும்.

சர்ச்சைக்குரிய அல்காரிதம்
எனவே, தொடர்ந்து யூசர்களை தங்களது தளத்தில் தக்க வைத்துக்கொள்ள, இந்த நிறுவனங்கள் சிறப்பு அல்காரிதம்களை பயன்படுத்துகின்றன. அதாவது ஒரு பயனர் எவ்வளவு நேரம் ஒரு வீடியோவை பார்க்கிறார் என்பதை பொறுத்து, அதேபோன்ற வீடியோக்களை அவர்களின் டைம் லைனில் காட்டும். இது யூசர்களை அதிக நேரம் சோஷியல் மீடியாக்களை பார்க்க தூண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும். மேற்பார்வையாக பார்த்தால் இந்த அல்காரிதத்தில் எந்த பிரச்சனையும் இல்லாதது போல தோன்றும். ஆனால் பஞ்சாயத்து இருக்கிறது.
கட்டுப்பாடு ஏன்?
மூளையில் உள்ள டோபமைன் என்கிற ரசாயனம் இயற்கையில் சுரக்கும். இது புத்தகம் படிக்கும் போதும், திரைப்படங்களை பார்க்கும் போதும், குறிப்பாக விளையாடும் போதும் சுரக்கிறது. இது நிம்மதி மற்றும் மகிழ்ச்சி உணர்வை தருகிறது. மன ஆரோக்கியத்திற்கு இது முக்கியம். ஆனால் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாகள் பின்பற்றும் அல்காரிதம் கொண்டு வடிவமைக்கப்படும் ரீல்ஸ்கள், இந்த டோபமைனை செயற்கையாக அதிக அளவில் சுரக்க வைக்கிறது.
எனவே சிறார்கள் சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இது மன நோய்களை ஏற்படுத்துகிறது. எனவேதான் ஆஸ்திரேலியா அரசு சிறார்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
எப்படி சாத்தியம்?
எல்லாம் ஓகேதான், இந்த கட்டுப்பாடுகளை அரசு எப்படி சரியாக நடைமுறைப்படுத்தப்போகிறது? என்று கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது, 16 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும் என அரசு சொல்கிறது. சிறார்கள் தங்கள் வயதை மாற்றி சொல்லி அக்கவுன்ட்டை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் எப்படி தவிர்க்க முடியும்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அபராதத்திற்கு வழிவகுக்கும் சட்டம்
இதற்குதான் ஆஸ்திரேலியா அரசு உஷாராக இந்த சட்டத்தை மாற்றத்துடன் கொண்டு வந்திருக்கிறது. அதாவது சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறார்களா? இல்லையா என்பதை கண்காணிப்பது அரசின் வேலை கிடையாது. பெற்றோர்களின் பொறுப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட சோஷயில் மீடியா நிறுவனங்கள்தான் இதை செய்ய வேண்டும். ஒருவேளை இதை செய்ய தவறினால் ரூ.295 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் என்ன?
எனவேதான் இந்த சட்டம் ஆஸ்திரேலியாவில் சோஷியல் மீடியாக்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. தற்போது அவசர அவசரமாக போலி, மற்றும் சிறார்களின் அக்கவுண்ட்களை நிறுவனங்கள் டெலிட் செய்து வருகின்றன. அதேபோல புதிய அக்கவுண்ட்களை உருவாக்கும் நபர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டிருக்கிறது. அதாவது புதிய கணக்கு தொடங்குபவர் அரசாங்கம் வழங்கியுள்ள அடையாள அட்டையை அப்லோடு செய்ய வேண்டும். அதேபோல வீடியோ செல்ஃபி, முக அங்கிகாரம் ஆகியவற்றை நிறுவனங்கள் பன்படுத்த இருக்கிறது.
தவிர வயது ஊகித்தல் நடைமுறையை பின்பற்றவும் திட்டமிட்டிருக்கிறது. அதாவது, அக்கவுண்ட் வைத்துள்ள நபர் செய்த போஸ்ட்கள் என்ன? எதையெல்லாம் லைக் செய்திருக்கிறார்? எதையெல்லாம் ஃபார்வேர்ட் செய்திருக்கறார்? என்பதை ஆய்வு செய்து, பயனாளர் 16 வயதுக்கு மேற்பட்டவரா? என்பதை உறுதி செய்வதைதான் வயது ஊகித்தல் என்று சொல்கிறார்கள்.
சவால்கள்
ஆக இதையெல்லாம் பயன்படுத்தி அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் ரெடியாகி வருகின்றன. இவ்வளவு செய்தாலும், இதையும் மீறி போலி கணக்குகள் உருவாக்கப்படலாம். போலியான அடையாள அட்டையை வைத்து அக்கவுண்ட்டை தொடங்க வாய்ப்புகள் உள்ளன. விபிஎன்-ஐ பயன்படுத்தி சோஷியல் மீடியாக்களை அணுக முடியும். பெற்றோருடன் தங்களது அக்கவுண்ட்டை இணைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. எனவே இந்த சவால்களை ஓவர்கம் செய்யவும் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.


Click it and Unblock the Notifications
