சாத்தானும் இல்ல, ஏலியனும் இல்ல! பெர்முடா முக்கோணத்தின் 70 வருட மர்மத்தை அறிந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி
கான்பெரா: அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா முக்கோனத்தின் மேல் செல்லும் பொருட்கள், விமானங்கள் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டு வந்த 70 ஆண்டுகால மர்மத்துக்கு விடை கண்டுவிட்டதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானி அறிவித்து இருக்கிறார்.
பல்வேறு மர்மங்களை உள்ளடக்கிய இந்த உலகில் பலவற்றுக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுவிட்டனர். ஆனால், விடைகாணப்படாத மர்மங்களும் உள்ளன.
அதில் முதன்மையானது பெர்முடா முக்கோணம். 7 லட்சம் கி.மீ பரப்பளவு கொண்ட இந்த முக்கோணத்தின் ஒரு முனை பெர்முடாவையும், மற்றொரு முனை அமெரிக்காவின் புளோரிடாவையும், அடுத்த முனை போர்டொ ரிகோவையும் தொடுகிறது.

70 ஆண்டுகால மர்மம்
அட்லாண்டிக் பெருங்கடலின் இந்த குறிப்பிட்ட முக்கோண வடிவிலான பரப்பளவின் மேல் செல்லும் பொருட்கள் மாயமாகி வந்ததால் அப்பகுதி பெர்முடா முக்கோணம் என்று 70 ஆண்டுகளுக்கும் மேலாக அழைக்கப்பட்டு வருகிறது. ஏராளமான கப்பல்கள், விமானங்கள், பறவைகள், இதை ஆராய்ச்சி செய்ய அப்பகுதிக்கு சென்ற விஞ்ஞானிகள் என மாயமாகிவிடுவதாக கூறப்பட்டு வந்தன.

விடைகிடைக்காத கேள்விகள்
இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிய பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், புவியியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழகங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தும் பயன் கிடைக்கவில்லை. சதிகோட்பாடுகளை ஆய்வு செய்து வருபவர்களும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

சாத்தானின் முக்கோணம்
மதங்களை நம்பிக்கை உடையவர்கள் இதை சாத்தானின் முக்கோணம் என்று தெரிவித்தனர். அங்கு செல்பவர்கள் கடவுளின் சாபத்திற்கு ஆளாகி மாயமாகிவிடுகின்றனர் எனக் கூறி வந்தனர். வேற்றுகிரக வாசிகள், ஏலியன்கள் அங்கு வசிப்பதாகவும், அங்கு எரிவாயு, தாது பொருட்கள் அதிகம் இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு செல்பவர்களை கொன்றுவிடுவதாகவும் இல்லுமினாட்டி சதி என்றும் சதிக்கோட்பாட்டாளர்கள் தெரிவித்து வந்தனர்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானி
விஞ்ஞானிகளை பொறுத்தவரை பெர்முடா முக்கோணத்தில் அதிகளவிலான புவி ஈர்ப்பு சக்தி இருக்கலாம் என்றும் அதன் காரணமாக விமானங்கள், கப்பல்களை உள் இழுத்துக்கொள்வதாகவும் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்ல் க்ரூஸ்செல்னிகி தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இதன் முடிவில் பெர்முடா முக்கோணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றும், அப்பகுதியில் நேர்ந்த அசம்பாவீதங்களுக்கு மோசமான வானிலையும் மனித பிழைகளுமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஃபிளைட் 19 விமானம் மாயம்
"இதற்கு ஏலியன்கள் காரணம் என்று பொதுமக்கள் தெரிவிப்பதை கேட்க முடிகிறது. விமானங்கள், கப்பல்கள் மாயமாவதற்கு காரணம் அதை இயக்கும் விமானிகள், கேப்டன்கள், பணியாளர்களின் அனுபவமின்மையே. இப்பகுதியில் 1945 ஆம் ஆண்டு பிளைட் 19 விமானம் என்ற விமானம் 14 பேருடன் மாயமானது. அதன் விமானி சார்லசிடம் மேற்கு நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர் கிழக்கு நோக்கி சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். அதற்கு முன் 2 முறை விமான விபத்தை ஏற்படுத்தியவர் சார்லஸ். இதுபோன்ற காரணங்களே அங்கு நேரும் விபத்துகளுக்கு காரணம்." என்றார்.

சராசரியான எண்ணிக்கை
கடந்த 2017 ஆம் ஆண்டு விஞ்ஞானி கார்ல் அளித்த பேட்டியில், "லாய்ட்ஸ் ஆப் லண்டன் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படையின் தகவலின் படி, பெர்முடா முக்கோணத்தில் மாயமான விமானங்களின் எண்ணிக்கை விகிதம் மற்ற பகுதிகளின் அளவுக்கே இருப்பதாக தெரிவித்துள்ளது. பெர்முடா முக்கோணம் என்பது ஈகுவடார் மற்றும் அமெரிக்காவுக்கு நெருக்கமாக உள்ளதால் அங்கு வான்வழி டிராபிக் அதிகம். விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகம்." எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications