அவ்வை தமிழ் மையம், டாலஸ் தமிழ் மன்றத்தின் பண்ணிசை நல்லசிவம், மக்களிசை ஜெயமூர்த்தி இசை நிகழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மின்னசோட்டா: அவ்வை தமிழ் மையமும் டாலஸ் தமிழ் மன்றமும் இணைந்து 'பண்ணிசை' நல்லசிவம் 'மக்களிசை' ஜெயமூர்த்தி இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக அவ்வை தமிழ் மையமும் டாலஸ் தமிழ் மன்றமும் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஃபெட்னா எனப்படும் பேரவையின் இவ்வாண்டு தமிழ் விழாவிற்கு வருகை தந்திருந்த பண்ணிசைப் பாடகர் நல்லசிவம், மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி ஆகிய இரு கலைஞர்களையும் டாலஸ் மாநகரத்திற்கு அழைத்து வந்து ஒரு இனிய இசை நிகழ்ச்சியை அவ்வை தமிழ் மையமும், டாலஸ் தமிழ் மன்றமும் இணைந்து வரும் சனிக்கிழமை, ஜூலை 15 அன்று மாலை ஏற்பாடு செய்துள்ளது.

Avvai Tamil Mandram and Dallas Tamil Mandram to organise Jayamoorthy and Nallasivam music Programme

கல்வெட்டியல், சுவடியியல், மூலிகை மருத்துவம், பக்தி இலக்கிய ஆய்வாளர், பண்ணிசை ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளரென விளங்குவதோடு, தேவார இசைமணி, சைவச்செம்மல், இலக்கியயிசையரசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் கோ.ப.நல்லசிவம் பண்ணிசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:- https://fetnaconvention.org/guests/nallasivam/

நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பாளார், மக்களிசை ஆய்வாளர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளார் என பன்முகங்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடா' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய திரை இசைப்பாடகர் ஜெயமூர்த்தி மக்களிசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள்.

இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:- https://fetnaconvention.org/guests/jayamoorthy/

உயர்தர ஒளி/ஒலி அமைப்புகள் கொண்ட "ஃப்ரிஸ்கோ டிஸ்கவரி செண்டர்"(Frisco Discovery Center) எனும் சிறப்பு அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான இருக்கை வசதிகளே உள்ளன.

எனவே, உங்கள் வருகையை முன்பதிவு செய்யும் படி விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

அனுமதி இலவசம்.

முன்பதிவு செய்ய :- https://goo.gl/w7Xq75

அதோடு, சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு இவ்வாரம் முழுவதும் மாலை வேளைகளில் 2 மணி நேர சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளும்​​ ​ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.​

​தொடர்புக்கு:- pannisai.org@gmail.com

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Avvai Tamil Mandram and Dallas Tamil Mandram to organise Jayamoorthy and Prof. Nallasivam music Programme at USA.
Please Wait while comments are loading...