வாரண்ட் மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்! திடீரென குரல் கொடுத்த சுப்ரீம் லீடர்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹாமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

iran

மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.

ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹைத்திக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 1,700 குழந்தைகள் உட்பட 42000 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்திரலையில் காசா பகுதியில் மனித குலத்திற்கே எதிரான போர் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, யோ காலண்ட், முஹம்மது தயீப், இப்ராஹீம் அல் மஸ்ரி ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதனை சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த நிலையில் இசையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். ஈரானின் துணை ராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் வீரர்களுடன் பேசிய அவர்,"காசா, லெபனானில் சியோனிச ஆட்சி போர் குற்றம் செய்திருக்கிறது. தற்போது அவர்களை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து இருக்கிறது. இது மட்டும் போதாது. நெதன்யாகு மற்றும் சியோனிச ஆட்சி கிரிமினல் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+