பாக்தாத்: தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 49 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் நேற்று அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 49 பேர் பலியாகினர்.

குண்டு வெடிப்பு இல்லாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு சமீபகாலமாக ஈராக் தலைநகரான பாக்தாத்தில் தினமும் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன. அந்தவகையில், நேற்று பாக்தாத் நகரில் 8 இடங்களில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 36 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும், கராடா, சட்ரியா, சுலைமானியா, அதமியா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி, மேலும் 13 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவங்களில் சிக்கி படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+