ஈராக்கின் 2வது பெரிய அணையை நெருங்கும் தீவிரவாதிகள்: பாக்தாத் குடிநீருக்கு அபாயம்
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அணையான ஹதிதா அணையை நெருங்குவதால் தலைநகர் பாக்தாத் குடிநீர் இன்றி வாட வேண்டி இருக்கலாம்.
ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தீவிவரவாதிகள் பலுஜா மற்றும் மொசுல் ஆகிய நகரை கைப்பற்றினர். தற்போது அவர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய அணையான ஹதிதா அணையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் பாக்தாத் நகரையும் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். யூப்ரடிஸ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹதிதா அணை தலைநகர் பாக்தாத்தில் இருந்து 193 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் அணையை கைப்பற்றினால் நாட்டுக்கு கேடு என்பதால் அவர்கள் அணையை அடையும் முன்பு தேவைப்பட்டால் அறிவித்தவுடன் நீரை திறந்துவிடுமாறு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்படி தீவிரவாதிகளை தடுக்க அணையை திறந்தால் பல ஊர்கள் வெள்ளக்காடாகும் என்று அணை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அணையை தீவிரவாதிகள் கைப்பற்றினால் அவர்கள் பல ஊர்களை வெள்ளக்காடாக்கிவிடுவார்கள். மேலும் பாக்தாத் நகரம் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை வந்துவிடும்.

முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் தீவிரவாதிகளுக்கு பயந்து பலுஜா அணை மூடப்பட்டதால் நஜாப் மற்றும் திவானியா ஆகிய மாகாணங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடின என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications